தமிழ்நாடு

“கோவையில் கொரோனா அதிகரிப்பதற்கு மோசமான உள்ளாட்சித்துறையே காரணம்” - தி.மு.க MLA பகிரங்க குற்றச்சாட்டு!

கொரோனா பரிசோதனை முடிவுகளை காலதாமதமாகவே வழங்குவது ஏன் என திமுக எம் எல் ஏ கார்த்திக் கேள்வி எழுப்பியுள்ளார்.

“கோவையில் கொரோனா அதிகரிப்பதற்கு மோசமான உள்ளாட்சித்துறையே காரணம்” - தி.மு.க MLA  பகிரங்க குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் அண்மைக் காலங்களாக சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் அதிகரித்து வருகிறது.

இரு வாரங்களுக்கு முன்பு வரை விருதுநகர், தூத்துக்குடி, தேனி போன்ற மாவட்டங்களில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்புகள் தற்போது சேலம், கோவை, கடலூர் போன்ற மாவட்டங்கள் பக்கம் திரும்பியிருக்கிறது.

அதில் சென்னை அடுத்தபடியாக கோவை மாவட்டத்திலேயே அதிகபட்சமாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகிறது. மே ஜூன் மாதங்களில் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக நீங்கிருந்த கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

“கோவையில் கொரோனா அதிகரிப்பதற்கு மோசமான உள்ளாட்சித்துறையே காரணம்” - தி.மு.க MLA  பகிரங்க குற்றச்சாட்டு!

இந்த நிலையில், கோவையில் கொரோனா தொற்று அதிகரித்திருப்பதற்கு உள்ளாட்சித்துறை நிர்வாகம் மெத்தனபோக்குடன் செயல்படுவதே காரணம் என கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரான கார்த்திக் எம்.எல்.ஏ குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், கொரோனா பரிசோதனை முடிவுகளை அறிவிப்பதில் காலதாமப்படுத்துவது ஏன் எனவும் கேள்வி எழுப்பிய அவர், கொரோனா ஊரடங்கால் 50 ஆயிரம் சிறு குறு தொழிற்கூடங்கள் பாதிக்கப்பட்டு, பல லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.

ஸ்மாட் சிட்டி திட்டத்தின் கீழ் தரமற்ற பணிகள் நடைபெறுகின்றது. இதன் மூலம் பல கோடி ஊழல் நடைபெறுகின்றது. 2016 க்கு பிறகு ஒப்பந்த பணிகள் தொடர்பாக மாநகராட்சி இணையத்தில் பதிவிறக்கம் செய்யாதது ஏன்? இதுதொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சூயஷ் ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும் இல்லையேல் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories