தமிழ்நாடு

“காசிமேடு மீனவர்கள் 10 பேர் 48 நாட்களாகியும் கரை திரும்பவில்லை” : மீனவர்களை கண்டுகொள்ளாத அ.தி.மு.க அரசு!

சென்னை காசிமேடு மீனவர்கள் 10 பேர் 48 நாட்களாகியும் கரை திரும்பவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

“காசிமேடு மீனவர்கள் 10 பேர் 48 நாட்களாகியும் கரை திரும்பவில்லை” : மீனவர்களை கண்டுகொள்ளாத அ.தி.மு.க அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஜூலை மாதம் 23-ம் தேதி காசிமேட்டைச் சேர்ந்த நந்தன் என்பவருக்குச் சொந்தமான ஃபைபர் படகில் பார்த்திபன், சிவக்குமார், புகழேந்தி, கே.மதி, ஸ்டீபன், பால்ராஜ், துரை, கருத்தகண்ணு, மதி, சுனில்குமார் ஆகிய10 மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

சென்னை துறைமுகத்தில் இருந்து 25 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக்கொண்டிருந்தவர்கள், திடீரென்று மாயமானதாக தெரிகிறது. இதனையடுத்து மீன் பிடிக்கச் சென்றவர்கள் ஆகஸ்ட் 10ம் தேதியன்று திரும்பிருக்கவேண்டும். ஆனால், மீனவர்கள் திரும்பாத காரணத்தினால், படகு உரிமையாளர் நந்தன் காசிமேடு மீன் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் இதுதொடர்பாக புகார் ஒன்றை அளித்தார்.

“காசிமேடு மீனவர்கள் 10 பேர் 48 நாட்களாகியும் கரை திரும்பவில்லை” : மீனவர்களை கண்டுகொள்ளாத அ.தி.மு.க அரசு!

புகார் அளித்து 10 நாட்களுக்கு மேல் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என கடந்த 21ம் தேதி மீனவர்களின் உறவினர்கள் காசிமேடு மீன்பிடி உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, காணாமல்போன மீனவர்களைத் தேடும் பணியின் போது, ஆந்திர கடலோரத்தில் படகு கவிழ்ந்து கிடப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இதுதொடர்பாக பேசிய காசிமேடு மீன் துறை உதவி இயக்குநர், படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த மீனவர்கள் சர்வதேச கடல் எல்லை வழியாக வந்த கப்பலில் ஏறி உயிர் பிழைத்தார்களா என்பதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிவித்தார்.

இந்த சம்பவம் நடந்து, 48 நாட்களுக்கு மேல் ஆகியும் காணாமல் போன மீனவர்களை இந்த அரசாங்கம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என உறவினர்கள் வேதனையுன் தெரிவிக்கின்றனர்.

“காசிமேடு மீனவர்கள் 10 பேர் 48 நாட்களாகியும் கரை திரும்பவில்லை” : மீனவர்களை கண்டுகொள்ளாத அ.தி.மு.க அரசு!

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய மீனவர் ஒருவர், “மீன்பிடிக்கச் சென்று காணாமல் போனவர்களை கண்டுபிடித்துத் தரும்படி பல முறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துவிட்டோம். ஆனால், இதுவரை அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விசாரணை குறித்து எந்த தகவலையும் எங்களுக்குத் தெரிவிக்கவில்லை.

இதுபற்றி நாங்கள் ஊடகங்களில் பேசக்கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவாளர்களும், ஆளும்கட்சிக்காரர்களும் மிரட்டுகிறார்கள். முதல்வரை சந்தித்து மனு கொடுக்கக் கூட அனுமதிப்பதில்லை. எங்கள் மக்கள் பற்றி இந்த அரசுக்கு ஒருபோதும் அக்கறை இல்லை.

அரசு கொடுக்கும் உதவித்தொகை எப்படி காணாமல் போனவர்களுக்கு ஈடாகும். மீனவர்களை மீட்டுக்கொடுக்க வேண்டும் என்பது மட்டும்தான் எங்களது கோரிக்கை. எனவே அரசு மத்திய அரசின் உதவியுடன் எங்கள் பகுதி மீனவர்களை கண்டுபிடித்து தரவேண்டும்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories