தமிழ்நாடு

கொரோனா பேரிடர் நேரத்திலும் மக்களை வதைப்பதைக் கைவிடாத அரசு : டோல்கேட் கட்டணம் நாளை முதல் உயர்வு!

தமிழகத்தில் உள்ள 21 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது.

கொரோனா பேரிடர் நேரத்திலும் மக்களை வதைப்பதைக் கைவிடாத அரசு : டோல்கேட் கட்டணம் நாளை முதல் உயர்வு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழக சுங்கச்சாவடிகளில் நாளை முதல் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 565 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 48 சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன.

இந்த சுங்கச்சவாடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை கட்டணம் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர்த்தப்படும். அதன்படி கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 26 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 21 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. இங்கு கட்டணங்கள் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பரவலை தடுக்க அமலாகியுள்ள ஊரடங்கால் அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு செல்லும் 40 சதவீத லாரிகள் மட்டுமே ஓடுகின்றன. இதர லாரிகளுக்கு இன்னும் முழு அளவில் பணி கிடைக்காமல் தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளன.

கொரோனா பேரிடர் நேரத்திலும் மக்களை வதைப்பதைக் கைவிடாத அரசு : டோல்கேட் கட்டணம் நாளை முதல் உயர்வு!

கொரோனா பாதிப்பால் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையிலும், அரசு மக்களின் குரலைக் கண்டுகொள்ளவில்லை.

சுங்கக் கட்டணத்தை உயர்த்துவதால், சரக்கு வாகனங்களின் கட்டணமும் உயர்த்தப்படும். இதனால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என மக்கள் கவலையடைந்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories