தமிழ்நாடு

ரவடி சங்கரின் எண்கவுன்டர் ஒரு திட்டமிட்ட நாடகம்: போலிஸார் அடித்து கொலை செய்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு!

சென்னை அயனாவரத்தில் ரவடி சங்கரை இஸ்பெக்டர் நடராஜ் எண்கவுன்டர் செய்தது நாடகம் என்றும் காவல்நிலையத்தில் சங்கரை அடித்து கொலை செய்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

ரவடி சங்கரின் எண்கவுன்டர் ஒரு திட்டமிட்ட நாடகம்: போலிஸார் அடித்து கொலை செய்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை, அயனாவரத்தில் கஞ்சா வழக்கில் பல நாட்களாக தேடப்பட்டு வந்த ரவடி சங்கரை கடந்த வாரம் அயனாவரம் இன்ஸ்பெக்டர் நடராஜ் கைது செய்தார். இதனையடுத்து, கஞ்சாவை அயனாவரம் பகுதியில் பதுக்கி வைத்ததாக அதை காண்பிப்பதாக ரவுடி சங்கர் கூறியதையடுத்து, நியூ ஆவடி ரோட்டிலுள்ள முட்புதர் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது அந்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட அரிவாள் எடுத்து, ரவுடி சங்கர் காவலர் முபாரக்கை தாக்கியதால் இன்ஸ்பெக்டர் நடராஜ் ரவுடி சங்கரை என்கவுண்டர் செய்த்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சங்கரின் தாயார் கோவிந்தம்மாள் மற்றும் சகோதரி ரேணுகா ஆகியோர், சங்கரின் மரணத்தில் மர்மம் உள்ளதாகவும், அவரை சுட்டுக்கொன்ற இன்ஸ்பெக்டர் நடராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

ரவடி சங்கரின் எண்கவுன்டர் ஒரு திட்டமிட்ட நாடகம்: போலிஸார் அடித்து கொலை செய்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு!

இதுக்குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை ஆணையர் வாக்குறுதி தந்தால் இரண்டு நாட்களுக்கு பிறகு சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் காவல் சங்கரின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் ரவுடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மனித உரிமை தொடர்பான விவகாரம் என்பதால் சிபிசிஐடி விசாரிக்க சென்னை காவல்துறை பரிந்துரைத்துள்ளது.வழக்கு நிலுவையில் உள்ள காவல் நிலையத்தில் போலீசே என்கவுண்டர் செய்தால் சிபிசிஐடி விசாரிப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories