தமிழ்நாடு

திருச்சியில் இறைச்சி கடைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் - மாறிமாறி அறிக்கை விடும் மாவட்ட நிர்வாகம்!

திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் நாளை இறைச்சிக் கடைகள் செயல்பட தடை விதித்திருந்த மாநகராட்சி நிர்வாகம், இன்று அந்த அறிவிப்பை திரும்பப் பெறும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

விநாயகர் சதுர்த்தி நாளான நாளை ஆடு, மாடு, வதைக்கூடங்கள் மற்றும் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இறைச்சி கடைகள் செயல்படாது என்று மாநகராட்சி அறிவிப்பு செய்துள்ளது. இந்த அறிவிப்பை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாநகராட்சி கமிஷனரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில், இறைச்சி கூடங்கள், விற்பனை கடைகள் செயல்பட கூடாது என்று அறிப்பு திருச்சியில் மட்டும் தான் செய்யப்படுகிறது. இது குறித்து கடந்த ஆண்டு புகார் அளித்த போது கடைகளை திறந்துகொள்ளலாம் என்று கூறினார்.

திருச்சியில் இறைச்சி கடைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் -  மாறிமாறி அறிக்கை விடும் மாவட்ட நிர்வாகம்!

அதன்படி கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு இறைச்சி கடைகள் அடைக்கவில்லை. நமது மாநகரத்தில் மட்டும் வரும் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்துகிறது. எனவே, அமைதியை நாடி அறிவிப்பை வாபஸ் ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இதனைத்தொடர்ந்து, விநாயகர் சதுர்த்தி அன்று ஆடு, மாடு வதை கூடங்கள் திறக்க கூடாது என்பது மாநகராட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு. அதனை மாற்ற இயலாது. ஆனால், இறைச்சி விற்பனை கடைகள் திறக்க கூடாது என்பது தவறுதலாக சேர்க்கப்பட்டுவிட்டது. எனவே தொடர்ந்து, திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளை (ஆக.22) இறைச்சிக் கடைகள் இயங்க தடை ஏதுமில்லை என்று மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

திருச்சியில் இறைச்சி கடைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் -  மாறிமாறி அறிக்கை விடும் மாவட்ட நிர்வாகம்!

இந்நிலையில் இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், “முன்னதாக தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் இறைச்சி கடைகளுக்கு தடைவிதித்து நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. பின்னர் கடும் எதிர்ப்பு எழவே, அந்த உத்தரவை திரும்ப பெருவதாக தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு வெளியிட்டார்.

தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் உள்ள நிலையில், பிற சமூக மக்களின் உணவு பழக்கவழங்களில் தடைவிப்பது உரிமை மீறலாகும். மேலும் இதுபோன்ற பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டும் அறிப்புகளை மாவட்ட நிர்வாகம் தலையீடு இல்லாமல், நகராட்சி, மாநகராட்சி நிர்வாகம் எப்படி தன்னிச்சை செயல்படுத்துகிறது என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் நகராட்சி, மாநகராட்சி நிர்வாகத்தை யாரேனும் பின்னல் இருந்து இயக்குகிறார்களா என்பது குறித்து விசாரணை நடத்தவேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories