தமிழ்நாடு

பள்ளிகளை திறந்தால் வரும் கொரோனா டாஸ்மாக்கை திறந்தால் மட்டும் வராதா?- அதிமுக அரசை விளாசும் சென்னை பெண்கள்!

பள்ளிகளை திறந்தால், பொது போக்குவரத்துக்கு அனுமதியளித்தால் பரவும் கொரோனா தொற்று டாஸ்மாக் கடையை திறப்பதால் பரவாதா?

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா அச்சத்தால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அதன்பிறகு தமிழகத்திலுள்ள மற்ற மாவட்டங்களில் கடைகள் திறக்கப்பட்டாலும் சென்னையில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்ததால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு நேற்று சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதனால் காலை முதல் குடிமகன்கள் கடைகளில் குவியத் தொடங்கினர். தனிமனித இடைவெளியை கடைபிடிக்க கட்டை வைத்து கட்டப்பட்டிருந்தது.

பள்ளிகளை திறந்தால் வரும் கொரோனா டாஸ்மாக்கை திறந்தால் மட்டும் வராதா?- அதிமுக அரசை விளாசும் சென்னை பெண்கள்!

கொரோனா அதிகமுள்ள சென்னையில் டாஸ்மாக் திறக்க வேண்டாம் என பல திசைகளில் இருந்து ஆர்ப்பாட்டங்களும், போராட்டமும் நடந்துகொண்டு இருக்கும் வேளையில், அவற்றைக் கண்டுகொள்ளாமல் டாஸ்மாக் திறக்க அறிவிப்பு வெளியிட்டது தமிழக அரசு.

தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கையால் நேற்று திறக்கப்பட்ட 720 கடைகள் மூலமாக மொத்தமாக 33 கோடியே 50 லட்ச ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது.

பள்ளிகளை திறந்தால் வரும் கொரோனா டாஸ்மாக்கை திறந்தால் மட்டும் வராதா?- அதிமுக அரசை விளாசும் சென்னை பெண்கள்!

இந்த நிலையில், டாஸ்மாக் கடை திறப்பு மக்கள் பெரும் கண்டனத்தை முன்வைத்துள்ளனர். பள்ளிகளை திறந்தால், பொது போக்குவரத்துக்கு அனுமதியளித்தால் கொரோனா தொற்று பரவும் எனக் கூறுகிறார்கள். தற்போது டாஸ்மாக் கடையை திறப்பதால் கொரோனா வந்துவிடாதா என எடப்பாடி அரசுக்கு கேள்விகளை முன்வைக்கிறார்கள்.

மேலும், ஊரடங்கு உத்தரவால் எவ்வித குடி பழக்கத்துக்கும் ஆளாகாமல் இருந்தனர் ஆண்கள். தற்போது மதுக்கடைகளை திறப்பதால் வீட்டில் சிறுகச் சிறுக சேமித்து வைத்திருந்த பணத்தையும் பிடுங்கிக்கொண்டுச் சென்று டாஸ்மாக் கடை முன் குவிகிறார்கள் என பெண்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories