தமிழகத்தில் புதிதாக 65 ஆயிரத்து 592 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் மேலும் 5,795 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதன்படி மொத்தமாக இதுவரை பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 3.55 லட்சத்து 449 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று 1,186 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் வரை 1,000க்கும் கீழ் பதிவாகி வந்த நிலையில் 3 நாட்களாக 1,000க்கும் அதிகமான பாதிப்புகள் ஏற்படுவது சென்னை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதவிர மற்ற மாவட்டங்களில் இன்று 4,609 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக கோவையில் 394, திருவள்ளூரில் 393, செங்கல்பட்டில் 315, சேலத்தில் 295, தேனியில் 288, காஞ்சியில் 257, கடலூரில் 238 என கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது.
மேலும் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் 116 பேர் தமிழகத்தில் பலியாகியிருக்கிறார்கள். இதன் மூலம் மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,123 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னை, கோவையில் தலா 16, ராணிப்பேட்டையில் 10, திருவள்ளூரில் 9, கடலூரில் 5, செங்கல்பட்டு, கன்னியாகுமரி, தென்காசி, தேனியில் தலா 4 பேர் என கொரோனாவால் உயிரிழந்திருக்கிறார்கள்.
அதேசமயத்தில் இன்று ஒரே நாளில் 6,384 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுவரையில் 2.96 லட்சத்து 171 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
ஆகவே தற்போது 53 ஆயிரத்து 155 பேருக்கு மருத்துவமனைகளிலும் வீடுகளிலும் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.