தமிழ்நாடு

குளறுபடிகள் நிறைந்த புதிய கல்விக்கொள்கையை முதல்வர் தொடர்ந்து எதிர்க்க வேண்டும் - மா.சுப்பிரமணியன் பேட்டி!

இந்த கல்விக் கொள்கையால் ஏற்படும் இன்னல்கள் குறித்து முதல்வர் விரிவாக மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.

குளறுபடிகள் நிறைந்த புதிய கல்விக்கொள்கையை முதல்வர் தொடர்ந்து எதிர்க்க வேண்டும் - மா.சுப்பிரமணியன் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதிய கல்விக் கொள்கையை நிராகரிக்குமாறு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், தலைவர்களின் கோரிக்கை கடிதத்தை தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் முதலமைச்சர் அலுவலகத்தில் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன்,

“தேசிய கல்விக் கொள்கையால் தமிழகத்தில் ஏற்படவுள்ள பாதிப்புகள், மாணவர்கள் சந்திக்க இருக்கும் இன்னல்கள் தொடர்பாக நேற்று திமுக தலைவர் தலைமையில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது.

அதன் அடிப்படையில் நேற்று முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தின் நகலை தற்போது முதல்வர் அலுவலகத்தில் அளித்துள்ளோம். தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது

குளறுபடிகள் நிறைந்த புதிய கல்விக்கொள்கையை முதல்வர் தொடர்ந்து எதிர்க்க வேண்டும் - மா.சுப்பிரமணியன் பேட்டி!

10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தும்போது மாணவர்கள் திணறும் சூழல் ஏற்பட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கை திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது. இதனை முதல்வர் தொடர்ந்து எதிர்க்க வேண்டும் என்று திமுக கோரிக்கை வைக்கிறது.

தொடர்ந்து ஆணித்தனமாக எதிர்த்து தடுக்க வேண்டும் என்று முதல்வருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த கல்விக் கொள்கையால் ஏற்படும் இன்னல்கள் குறித்து முதல்வர் விரிவாக மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள இரு மொழிக் கொள்கைக்கு விரோதமான மொழித் திட்டத்தை திணிப்பதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அதனால் புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு முற்றிலும் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று அனைத்து கட்சிகளின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் 2006 ஆகியவை தொடரும் என்று பகிரங்கமாக அறிவித்து அது தொடர்பாக தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அனைத்து கட்சிகளின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.” எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories