தமிழ்நாடு

“சிகிச்சை சரியல்ல; இன்னும் 2 நாளில் இறந்துவிடுவேன்” : ஆடியோ வெளியிட்ட மருத்துவர் சாந்திலால் உயிரிழப்பு!

மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை சரியல்ல என ஆடியோ பதிவு வெளியிட்ட மருத்துவர் சாந்திலால் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“சிகிச்சை சரியல்ல; இன்னும் 2 நாளில் இறந்துவிடுவேன்” : ஆடியோ வெளியிட்ட மருத்துவர் சாந்திலால் உயிரிழப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் சாந்திலால். இவர் ராஜபாளையம் பகுதியில் சாந்தி என்ற மருத்துவமனை தனது மருத்துவமனையில் 40 ஆண்டுகளாக குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்த்து வருகிறது.

கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு கட்டணம் வசூலிக்காமலும், குறைந்த கட்டணம், இலவசமாக மருந்துக்கொடுப்பது என பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துவந்தார். இந்நிலையில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு உதவிய மருத்துவர் சாந்திலாலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து ராஜபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சாந்திலால் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

“சிகிச்சை சரியல்ல; இன்னும் 2 நாளில் இறந்துவிடுவேன்” : ஆடியோ வெளியிட்ட மருத்துவர் சாந்திலால் உயிரிழப்பு!

ஆனால் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை திருப்திகரமாக இல்லை என்பதால் மதுரையில் உள்ள மற்றோரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கான சேர்ந்தார். ஆனால் அவருக்கு அங்கு சிகிச்சையின் போது மூச்சு தினறல் அதிகமாக இருந்துள்ளது.

இதனையடுத்து கடந்த 16ம் தேதி மீண்டும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் சிகிச்சையில் இருந்தபோது அரசு மருத்துவமனையில் தனக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என 4 நாட்களுக்கு முன்னதாக ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதில், “ஹலோ.. நான் சாந்திலால் பேசுறேன். அனேகமா இன்னைக்கி, நாளைக்குள்ள நான் இறந்துடுவேன். ட்ரிட்மெண்ட் எதுவும் சரியில்லை. ஆக்சிஜன் அறைகுறையுமாக வைக்கிறார். மூச்சு திணறல் இருப்பதால் இது கடைசி கட்டம். போய்ட்டு வர்றேன். எல்லாருக்கும் ரொம்ப நன்றி” எனத் தெரிவித்தார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைராலது. பலரும் மருத்துவர் சாந்திலாலுக்கு சிகிச்சை அளிக்கவேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

சிகிச்சை கிடைக்காமல் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் - கலங்கவைக்கும் இறுதி ஆடியோ! #KutramThedi #Virudhunagar #Covid19 #DrShanthilal #Crime

Posted by Kalaignar Seithigal on Thursday, July 30, 2020

இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை சாந்திலால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா நோயாளிகளுக்கு பல்வேறு உதவிய மருத்துவர் சாந்திலால் கொரோனாவல் உயிரிழந்துள்ளது அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசின் முறையான சிகிச்சை இல்லாததால் தான் மருத்துவர் காந்திலால் உயிரிழந்துள்ளார் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories