தமிழ்நாடு

அரபிக்கடலில் சூறாவளி; 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.. சென்னையில் மேகமூட்டமே மிஞ்சும்!

ஜூலை 31 வரை தென்மேற்கு அரபிக்கடலுக்கு செல்லவேண்டாம் என சென்னை வானிலை மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரபிக்கடலில் சூறாவளி; 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.. சென்னையில் மேகமூட்டமே மிஞ்சும்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வட கடலோர மாவட்டங்கள், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 17 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேப்போல, நீலகிரி, கோவை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில், 4 சென்டி மீட்டர் மழையும் வேலூர் மாவட்டம் காட்பாடியில் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

அரபிக்கடலில் சூறாவளி; 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.. சென்னையில் மேகமூட்டமே மிஞ்சும்!

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் நாளை தென்கிழக்கு வங்க கடல், அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம்.

அதேபோல, 28-ஆம் தேதி தெற்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளுக்கும், ஜூலை 28 முதல் 30 ஆம் தேதி வரை கேரள மற்றும் லட்சத் தீவு பகுதிகளுக்கும், கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கும், ஜூலை 29 முதல் 31 ஆம் தேதி வரையும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் வருகிற 31-ஆம் தேதி வரை தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 28 ஆம் தேதி இரவு 11.30 மணி முதல் கடலலை 2.7 மீட்டர் 3.7 மீட்டர் வரை எழும்பக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories