தமிழ்நாடு

“மத்திய அரசின் குடோனில் இருந்து வெளிவரும் பூச்சிகளால் சுகாதார பாதிப்பு”: கொந்தளிக்கும் தி.மு.க எம்.எல்.ஏ!

மத்திய அரசின் உணவு தானிய சேமிப்பு கிடங்கில் இருந்து வரும் செல் பூச்சிகளால் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகுவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கார்த்திக் எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார்.

“மத்திய அரசின் குடோனில் இருந்து வெளிவரும் பூச்சிகளால் சுகாதார பாதிப்பு”: கொந்தளிக்கும் தி.மு.க எம்.எல்.ஏ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பீளமேடு, காந்திமாநகர் பகுதியில் உள்ள மத்திய அரசின் உணவு தானிய சேமிப்பு கிடங்கில் இருந்து வரும் செல் பூச்சிகளால் முருகன் நகர், ஸ்ரீராம் நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் . இந்த செல் பூச்சிகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம் எல் ஏ, கோவை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம் எல் ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், “பீளமேடு, காந்திமாநகர் பகுதியில் மத்திய அரசின் உணவு தானிய சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் பல வருடங்களாக இருப்பு வைக்கப்பட்ட தானியங்களால் செல்பூச்சிகள் உற்பத்தியாகிறது.

கிடங்கில் இருந்து வெளியேறும் செல்பூச்சிகள் அக்கம்பக்கத்தில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்து, பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதனால் உணவு தானிய சேமிப்பு கிடங்கு அருகில் இருக்கும் பகுதிகளாகிய முருகன் நகர், ஸ்ரீராம் நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்

“மத்திய அரசின் குடோனில் இருந்து வெளிவரும் பூச்சிகளால் சுகாதார பாதிப்பு”: கொந்தளிக்கும் தி.மு.க எம்.எல்.ஏ!

இந்த கிடங்கில் இருந்து , செல் பூச்சிகள் குடியிருப்பு பகுதிக்குள் பறந்து வருகின்றன. பூச்சிகள் கடிப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் பல்வேறு உடல்நல பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இரவு நேரங்களில் தூக்கம் இன்றியும் தவித்து வருகின்றனர்.

மளிகை கடை, பேக்கரிகளில் குடிநீரில் பூச்சிகள் மொய்க்கின்றன. உணவுகளில் இந்த பூச்சிகள் விழுவதால் வீடுகளில் உணவு பொருட்களைக்கூட வைக்க முடியவில்லை. குடோனில் இருந்து வெளியே வரும் பூச்சிகளால், சுற்றுப்புற சூழலும், சுகாதாரமும் பாதிக்கிறது.

குடோனில் இருந்து பூச்சிகள் வெளிப்படாத வகையில், சுகாதார முறைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கையாள வேண்டும். இதுதொடர்பாக தானிய கிடங்கின் அதிகாரிகளிடமும், மாநகராட்சி அதிகாரிகளிடம் நான் பலமுறை நேரில் சந்தித்தும், கடிதம் கொடுத்து புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

ஆகவே மேற்கண்ட பகுதிகளில் , நிரந்தரமாக, நவீன முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories