தமிழ்நாடு

சென்னையில் மிதமான மழையுடன் குளுமையே நிலவும்.. அடுத்த 2 நாட்களுக்கான தமிழக வானிலையின் நிலவரம் இதுதான்!

அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும்.

அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி, கோவை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்ய கூடும். அதிகபட்ச வெப்பநிலை ஆக 32 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்ப நிலையாக 27 டிகிரி செல்சியசும் பதிவாகும்.

சென்னையில் மிதமான மழையுடன் குளுமையே நிலவும்..  அடுத்த 2 நாட்களுக்கான தமிழக வானிலையின் நிலவரம் இதுதான்!

கடந்த 24 மணி நேரத்தில் திருப்பூர் காங்கேயத்தில் 10 செ.மீட்டர், அரவக்குறிச்சியில் 8 செ.மீட்டர், கோவை வால்பாறை மற்றும் நீலகிரிக்குட்பட்ட உதகமண்டலத்தில் 7 செ.மீட்டர், கிருஷ்ணகிரி சூளகிரியில் 6 செ.மீட்டர், திருப்பூர் வெள்ளகோவிலில் 5 செ.மீட்டர் மற்றும் சென்னை கிண்டி, கோவை சோலையாரில் 3 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை..

ஜூலை 19 மற்றும் 20ம் தேதிகளில், குமரி கடல் பகுதிகள், மத்திய கிழக்கு, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கர்நாடகா, லட்சதீவு பகுதிகள் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அதேபோல, ஜூலை 19 முதல் ஜூலை 23ஆம் தேதி வரை, தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories