தமிழ்நாடு

“பலமுறை இ-பாஸ் விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை”: மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட முதியவர்-அதிர்ச்சி சம்பவம்!

பெங்களூரில் உள்ள மகள் வீட்டிற்குச் சென்ற மனைவி ஊரடங்கால் வராததால் ஆதம்பாக்கத்தில் முதியவர் மனமுடைந்து தற்கொலை!

“பலமுறை இ-பாஸ் விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை”: மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட முதியவர்-அதிர்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சந்திரமோகன் (72). இவரது மனைவி கொரோனா ஊரடங்கிற்கு முன் பெங்களூரில் உள்ள மகள் வீட்டிற்குச் சென்றார். ஊரடங்கால் சென்னைக்கு திரும்ப முடியாமல் தவித்து வந்துள்ளார்.

பல முறை இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்ட சந்திரமோகன் இதனால் மிகுந்த வேதனையுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவரது வீட்டில் துர்நாற்றம் வீச தொடங்கியதால் அக்கம்பக்கத்தினர் ஆதம்பாக்கம் போலிஸாருக்கு தகவல் தந்தனர். ஆதம்பாக்கம் போலிஸார் வந்து கதவை உடைத்துப் பார்த்தபோது சந்திரமோகன் படுக்கை அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்திருந்ததைக் கண்டனர்.

தற்கொலை செய்துகொண்டு 4 நாட்கள் இருக்கும் எனக் கூறப்படுகிறது. உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த ஆதம்பாக்கம் போலிஸார் வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories