தமிழ்நாடு

“பரமகுரு படுகொலை குற்றவாளிகளை கைது செய்யும் வரை கொலை வழக்கில் ஆஜராகமாட்டோம்” - வழக்கறிஞர்கள் தீர்மானம்!

பரமகுரு படுகொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யும் வரை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஆஜராக மாட்டோம் எனவும் வழக்கறிஞர்கள் தீர்மானம்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவர் பரமகுரு படுகொலை வழக்கில் உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஆஜராக மாட்டோம் என திருவள்ளுர் வழக்கறிஞர்கள் தீர்மானம் செய்துள்ளனர்.

திருவள்ளூரை அடுத்த கொசவம்பாளையம் தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவரும் வழக்கறிஞருமான பரமகுரு நேற்று முன்தினம் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். மணல் கொள்ளையை தட்டிக் கேட்டதால் இந்த கொடூர கொலை நிகழ்ந்துள்ளது.

பரமகுரு வெட்டிக் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திருவள்ளூர் மாவட்ட அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம் செய்திட வேண்டும் என்றும் வழக்கறிஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும், பரமகுரு படுகொலை வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்யும் வரை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகப் போவதில்லை எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories