தமிழ்நாடு

"வேலையில்ல அதனால பேங்க் வச்சிட்டோம்" - பண்ருட்டியில் எஸ்.பி.ஐ பெயரில் போலி வங்கிக் கிளை!

பண்ருட்டியில் போலி வங்கிக் கிளை தொடங்க இருந்த 3 பேரை காவல் துறை கைது செய்துள்ளது

"வேலையில்ல அதனால பேங்க் வச்சிட்டோம்" - பண்ருட்டியில் எஸ்.பி.ஐ பெயரில் போலி வங்கிக் கிளை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில், பாரத ஸ்டேட் வங்கி பெயரில் போலி வங்கிக் கிளை தொடங்க முயற்சி செய்து வந்த 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கமல்பாபு என்ற இளைஞர் உள்ளிட்ட மூன்று பேர், போலி வங்கியை நடத்த வாடகைக்கு இடம் தேடி வந்ததை அறிந்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

வங்கி நடத்துவதற்காக, பண்ருட்டி நார்த் பஜார் பாரத் ஸ்டேட் வங்கி என்ற பெயரில் வங்கி படிவங்கள், சலான், ஸ்டாம்ப் போன்றவற்றை அச்சடித்து தயாராக வைத்திருந்திருக்கின்றனர்.

ஊரடங்கு நேரத்தில் வேலை எதுவும் இல்லாததால், பேசாமல் வங்கி தொடங்கி விடலாம் என்ற விபரீத முடிவுக்கு வந்துள்ளனர். இதற்கு மாஸ்டர் பிளான் போட்ட கமல்பாபுவின் பெற்றோர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகள். அவர்களது பணியை கவனித்து வளர்ந்தவர் என்பதால், போலி வங்கி நடத்திவிட முடிவு செயந்ததாக கூறுகிறார்.

banner

Related Stories

Related Stories