தமிழ்நாடு

"அவமானம், மன உளைச்சல்" - 5 பேரும் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டதன் பின் இருக்கும் காரணம்!

சாத்தான்குளம் கொலைகள் வழக்கில் கைது செய்யப்பட்ட 5 போலிசாரும் மதுரை சிறைக்கு மாற்றம்.

"அவமானம், மன உளைச்சல்" - 5 பேரும் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டதன் பின் இருக்கும் காரணம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில் ஆய்வாளர் ஶ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோர் சி.பி.சி.ஐ.டி காவல் துறையால் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், 5 பேரும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றாப்பட்டுள்ளனர்.

கோவில்பட்டியில் வைத்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகளை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

பாதுகாப்பு காரணங்கள் கருதியே, அவர்கள் சிறை மாற்றம் செய்யப்பட்டதாக, சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அதைத் தாண்டி வேறு சில காரணங்கள் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பேரூரணி மாவட்ட சிறை, புதிதாக கட்டப்பட்ட சிறைச்சாலை. அங்கு மரம், காற்றோட்டம் போன்ற சூழல் இல்லாமல், கான்கிரீட் சிறையாக இருக்கும். வசதியான சூழல் அங்கு இல்லை. மேலும், உணவும் சரியில்லை என கைது செய்யப்பட்ட காவலர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல், அச்சிறையில் இருக்கும் கைதிகளில், சாத்தான்குளம் போலிஸாரால் கைது செய்யப்பட்டவர்களும் இருக்கின்றனர். தாங்கள் கைது செய்து அடைத்த குற்றவாளிகளுக்கு நடுவில் தாங்களும் கைதிகளாக இருப்பது அவர்களுக்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

போலிஸ் என்ற கெத்துடன் வளம் வந்த உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், தான் கைது செய்த குற்றவாளிகளின் மத்தியில் இருக்கிறோமே என்பதை எண்ணி மிகுந்த மன உளைச்சலைக்கு உள்ளாகியதாகவும், அவர் சிறைக்குள் நுழையும் போது மிகுந்த வேதனை அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

முதலில் அருகில் இருக்கும் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றலாம் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் அங்கும் இதே நிலை அவர்களுக்கு ஏற்படும் என்பதால் தான் 5 பேரும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories