தமிழ்நாடு

அமைச்சருக்கு நெருக்கமானவர் என CBCIDஐ மிரட்டிய ஸ்ரீதர்: யார் அந்த அதிமுக பிரமுகர்? - கனிமொழி எம்.பி சாடல்

ஜெயராஜும், பென்னிக்ஸும் உயிரிழந்தது லாக் அப் மரணமல்ல என புதிதாக ஒரு விளக்கத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ கொடுத்திருந்தார்.

அமைச்சருக்கு நெருக்கமானவர் என CBCIDஐ மிரட்டிய  ஸ்ரீதர்: யார் அந்த அதிமுக பிரமுகர்? - கனிமொழி எம்.பி சாடல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சாத்தான்குளத்தின் போலிஸாரின் அதிகார வன்முறைக்கு வியாபாரிகளான தந்தை மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் அடித்தேக் கொல்லப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அதிமுக அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமானவர் என்றுக் கூறி சிபிசிஐடி போலிஸாரை மிரட்டியுள்ளார் என தி இந்து ஆங்கில நாளேடு தெரிவித்துள்ளது.

நாட்டையே உலுக்கிய இந்த லாக்கப் மரணம் குறித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் ஆணையின் பேரில் நெல்லை சிபிசிஐடி போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, வணிகர்களைக் கொன்ற வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ் மற்றும் முருகன் ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நால்வரை கைது செய்துள்ளனர். அதில், காவலர் முத்துராஜ் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, கொலைவழக்குப் பதிவு செய்யப்பட்டதும் முதலில் கைதான ரகு கணேஷை அடுத்து தலைமறைவாக இருந்த மற்ற போலிஸாரை கைது செய்வதற்காக சிபிசிஐடி தனிப்படை தேடுதல் வேட்டையில் இறங்கியது. அப்போது, காவல் ஆய்வாளரான ஸ்ரீதர் கார் மூலம் தேனிக்கு தப்பிச்செல்ல முயன்றது தெரிய வந்ததை அடுத்து கங்கைக்கொண்டான் சோதனைச் சாவடியில் அதிகாலை 4 மணியளவில் ஸ்ரீதரை சிபிசிஐடி மடக்கி பிடித்து கைது செய்தது.

அப்போது, தான் அதிமுக அமைச்சருக்கு நெருக்கமானவர் என மிரட்டும் தொணியில் ஸ்ரீதர் பேசியதாக சிபிசிஐடி போலிஸார் தெரிவித்துள்ளதாக தி இந்து ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தப்பிச்செல்வதற்காக ஆளுங்கட்சியினர் சிலர் உதவியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சருக்கு நெருக்கமானவர் என CBCIDஐ மிரட்டிய  ஸ்ரீதர்: யார் அந்த அதிமுக பிரமுகர்? - கனிமொழி எம்.பி சாடல்

முன்னதாக, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் கடம்பூர் ராஜூவோ ஜெயராஜும், பென்னிக்ஸும் உயிரிழந்தது லாக் அப் மரணமல்ல என புதிதாக ஒரு விளக்கத்தை கொடுத்திருந்தார். அதேபோல, காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் மூச்சுத்திணறலாலும், உடல்நலக் குறைவாலும் உயிரிழந்தனர் என்று முதல்வர் கூறினார்.

தற்போது ஆய்வாளர் ஸ்ரீதர் அமைச்சருடன் தனக்கு நெருக்கம் இருப்பதை சிபிசிஐடியிடமே வெளிப்படுத்தியுள்ளது அமைச்சர் கடம்பூர் ராஜூவையே குறிக்கிறது என பேசப்படுகிறது.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள தி.மு.க. எம்.பி கனிமொழி “குற்றவாளிகளை, அ.தி.மு.க காப்பாற்றுகிறது என்று நாங்கள் சொன்னால் அரசியல் செய்கிறோம் என்கிறார்கள். இதற்கு எடப்பாடி பழனிசாமியும் அமைச்சர் கடம்பூர் ராஜூவும் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories