தமிழ்நாடு

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலையில் புது திருப்பம்: போலிஸின் FIR ஜோடிக்கப்பட்டது என அம்பலம்!

சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை மகன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் போலிஸாரின் முதல் தகவல் அறிக்கையில் உள்ள தகவல் பொய் என சிசிடிவி காட்சி மூலம் அம்பலமாகியுள்ளது.

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலையில் புது திருப்பம்: போலிஸின் FIR ஜோடிக்கப்பட்டது என அம்பலம்!
Vikatan
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் எவ்வித குற்றமும் இழைக்காத போது காவல்துறை அதிகாரிகள் தன்னுடைய அதிகாரத்தை வெளிப்படுத்துவதற்காக அநியாயமாக அவர்களை கடுமையான சித்ரவதைக்கு ஆளாக்கி கொடூரமாக கொன்றுக் குவித்த சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா ஊரடங்கு நேரத்தில் மாநிலம் முழுவதும் பல்வேறு காவல்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளில் அல்லும் பகலும் முன்கள வீரர்களாக பணியாற்றி வரும் வேளையில் இது போன்ற சில அதிகார வெறிபிடித்த போலிஸாரின் செயலால் ஒட்டுமொத்த காவல்துறையின் மீதான நம்பிக்கையே ஒழிந்துவிடுகிறது என மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலையில் புது திருப்பம்: போலிஸின் FIR ஜோடிக்கப்பட்டது என அம்பலம்!

மேலும், ஜெயராஜ், பென்னிக்ஸ் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதியாக தாக்குதல் நடத்திய அனைத்து போலிஸார் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி போராட்டங்களும் எழுந்துள்ளன. இந்நிலையில், ஜெயராஜ், பென்னிக்ஸ் உடல்நலக் குறைவு காரணமாகவே இறந்தார்கள் என காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை ஜோடிக்கப்பட்டதே என நிரூபிக்கும் வகையில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

போலிஸாரின் முதல் தகவல் அறிக்கையில், ஜெயராஜும், பென்னிக்ஸும் அரசு குறிப்பிட்ட நேரத்தை மீறி கடையைத் திறந்து வைத்திருந்து, கூட்டம் கூட்டியதால் அழைத்து விசாரித்தபோது காவல்துறையினரிடையே வாக்குவாதம் செய்து, தரையில் புரண்டு கலாட்டா செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த ஜூன் 19ம் தேதி இரவு பதிவான சிசிடிவி காட்சிகளில் FIRல் குறிப்பிட்டது போன்ற எவ்வித நிகழ்வும் பதிவாகவில்லை என்பது இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது.

இவை அனைத்து ஜூன் 19ம் தேதி இரவு 7.40 மணிக்கு பிறகே நடைபெற்றிருக்கிறது. ஆகவே போலிஸார் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டதை போன்று பென்னிக்ஸும், ஜெயராஜும் எந்த விதிமீறல்களிலும் ஈடுபடவில்லை என்பது ஊர்ஜிதமாகியுள்ளது.

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலையில் புது திருப்பம்: போலிஸின் FIR ஜோடிக்கப்பட்டது என அம்பலம்!

மேலும் அந்த வீடியோவில் ஜெயராஜை போலிஸார் அழைத்துச் சென்றதை அடுத்து காவல் நிலையத்துக்கு செல்வதற்காக தனது நண்பருடன் பென்னிக்ஸ் இரு சக்கர வாகனத்தில் செல்வதும் பதிவாகியுள்ளது. அதேபோல, எவ்வித விதி மீறல்களிலும் ஈடுபடாத ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது அவசியமின்றி பழி சுமத்தி காவல்துறை தனது அதிகார வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories