தமிழ்நாடு

“உயிர்மை ஃபேஸ்புக் பக்கம் மீது தாக்குதல்” - மனுஷ்யபுத்திரன் குற்றச்சாட்டு!

மனுஷ்யபுத்திரனின் ‘உயிர்மை’ இணையதளத்தின் ஃபேஸ்புக் பக்கத்தை முடக்கும் வகையில் தொடர் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

எழுத்தாளரும், கவிஞருமான மனுஷ்யபுத்திரனின் ‘உயிர்மை’ இணையதளத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் செய்திகளைப் பகிரமுடியாதபடி முடக்கும் வகையில் தொடர் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

கருத்துச் சுதந்திரத்திற்கு விரோதமான வகையில், தங்களை விமர்சிக்கும் ஊடகங்களை மிரட்டுவதும், அச்சுறுத்துவதும் பா.ஜ.க ஆதரவாளர்களின் வாடிக்கையாக இருக்கிறது. உச்சமாக, பா.ஜ.க ஆட்சிக் காலத்தில் எதிர்க்கருத்துகளைத் தெரிவிக்கும் எழுத்தாளர்கள் படுகொலையும் செய்யப்பட்டுள்ளனர்.

இலக்கிய - சமூக - அரசியல் தளமாகச் செயல்படும் உயிர்மையின் கருத்துகளுக்கு எதிரான பாசிச சிந்தனை கொண்டவர்களால் திட்டமிட்டு செயல்படுத்தப்படும் கும்பல் தாக்குதல் குறித்து மனுஷ்யபுத்திரன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு பின்வருமாறு :

“கோழைகளோடு சண்டையிடுவது இது முதன்முறையல்ல. ஃபேஸ்புக்கிலிருந்து உயிர்மை இணையதளத்தின் லிங்க் எதையும் ஷேர் செய்ய இயலாதபடி ரிப்போர்ட் செய்து ப்ளாக் செய்திருக்கிறார்கள். இதை யார் செய்திருப்பார்கள் என்று விளக்கவேண்டியதில்லை. உயிர்மையின் அரசியல் யாரை விமர்சிக்கிறதோ அவர்கள்தான் இந்த இழிவான தாக்குதலை மேற்கொண்டிருக்கக்கூடும்.

உயிர்மை மின்னிதழ் இதழியல் அறத்திற்கு புறம்பாக ஒரு சொல்லையும் பிரசுரித்ததில்லை. அது முழுக்க இலக்கிய, சமூக, அரசியல் விழுமியங்களுக்கான ஒரு முற்போக்கான தளம். குறுகிய காலத்தில் அது பல்லாயிரம் வாசர்களை அடைந்து பரவலான கவனம் பெற்றிருப்பதுடன் பலதரப்பட்ட படைப்பாளிகளின் களமாகத் தொடர்ந்து திகழ்ந்து வருகிறது. உயிர்மை தாக்கப்படுவது முற்போக்கு ஊடகங்களுக்கு எதிராக தொடர்ந்து நடக்கும் தாக்குதல்களின் தொடர்ச்சியே.

“உயிர்மை ஃபேஸ்புக் பக்கம் மீது தாக்குதல்” - மனுஷ்யபுத்திரன் குற்றச்சாட்டு!

இந்தப் பிரச்சினையை சரி செய்ய எங்கள் தொழில்நுட்பக் குழுவினர் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். உயிர்மை மின்னிதழில் நாளையிலிருந்து வழக்கம்போல படைப்புகள் பதிவேற்றம் செய்யப்படும். நண்பர்கள் ஃபேஸ்புக் பிரச்னை சரியாகும்வரை நேரடியாக உயிர்மை தளத்திற்குச் சென்று படைப்புகளை வாசிக்க வேண்டுகிறேன்.

எவ்வளவோ மோசமான அவதூறுகள் தடைகளை இந்த 18 ஆண்டுகளில் கடந்து வந்திருக்கிறோம். இதையும் கடந்து வருவோம். உயிர்மை ஒரு இதழ் அல்ல. இயக்கம். நான் இல்லாமல்போனாலும் உயிர்மை இருக்கவேண்டும் என்பதுதான் என் ஆசை.”

banner

Related Stories

Related Stories