தமிழ்நாடு

சாத்தான்குளம் இரட்டை கொலை: “அதிகார வன்முறைகளுக்கு ஒரு முடிவுக்கட்ட வேண்டும்” - நடிகர் சூர்யா அறிக்கை!

தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என்ற நம்பிக்கையை அரசாங்கமும், நீதி அமைப்புகளும் மக்களிடம் உருவாக்க வேண்டும் என நடிகர் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.

சாத்தான்குளம் இரட்டை கொலை: “அதிகார வன்முறைகளுக்கு ஒரு முடிவுக்கட்ட வேண்டும்” - நடிகர் சூர்யா அறிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் பகுதியில் வியாபாரிகளான தந்தை மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும், கொரோனா ஊரடங்கு நேரத்தில் கைது செய்த எஸ்.ஐ பாலகிருஷ்ணன் உள்ளிட்ட போலிஸார் சித்ரவதை செய்து அடித்து துன்புறுத்தி கொன்றுக் குவித்துள்ள சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலிஸாரின் இந்த அராஜக கொடூரச் செயல்களுக்கு நீதி கேட்டு பல்வேறு அரசியல் தரப்பினரும், மக்களும் போராடி வருகின்றனர். அதேபோல, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் இரட்டைப் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனைகள் அளிக்கப்பட வேண்டும் என அரசை வலியுறுத்தியதோடு, சட்டரீதியாக பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு தி.மு.கழகம் துணை நிற்கும் எனவும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், நடிகரும், தயாரிப்பாளருமான சூர்யா சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலையைக் கண்டித்தும், கொலைக்கு காரணமாக இருந்த காவல்துறையினர் மீது பணியிடை மாற்றம், சஸ்பெண்ட் போன்ற வழக்கமான நடவடிக்கைகளுக்கு பதிலாக கடுமையான தண்டனை வழங்கி இனி இது போன்றதொரு லாக்கப் கொலைகள் நடைபெற்றுவிடாத வண்ணம் போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில்., “தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என்ற நம்பிக்கையை அரசாங்கமும், நீதி அமைப்புகளும் மக்களிடம் உருவாக்க வேண்டும். மாறாக நமது அதிகார அமைப்புகள் அவநம்பிக்கையையே ஏற்படுத்துகின்றனர். அதிகார அத்துமீறல் வன்முறையால் ஒரு போதும் மக்களின் மனதை வெல்ல முடியாது. அன்பும், அக்கறையும் கொண்டு கடமையை செய்கிற காவல்துறையினரே மக்களின் மனதில் நிலைத்து நிற்கிறார்கள்.

தந்தையும், மகனும் ஒரே நேரத்தில் இழந்து வாடுகிற அந்த குடும்பத்தினரின் துயரத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன். இனிமேலும் இதுபோன்ற அதிகார வன்முறைகள் காவல்துறையில் நிகழாமல் தடுக்க தேவையான மாற்றங்களை, சீர்திருத்தங்களை அரசும், நீதிமன்றமும்ம் பொறுப்பு மிக்க காவல் அதிகாரிகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

குற்றம் இழைத்தவர்களும் அதற்கு துணை போனவர்களும் விரைவாக தண்டிக்கப்பட்டு நீதி நிலை நிறுத்தப்படும் என்று பொதுமக்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன்.” என சூர்யா தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories