தமிழ்நாடு

போலிஸ் தாக்கியதால் மனமுடைந்து தற்கொலை: “உயிர்குடிக்கும் மாவட்டமாகும் தூத்துக்குடி?”- மு.க.ஸ்டாலின் வேதனை!

எட்டயபுரத்தில் போலிஸ் தாக்குதலால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட கணேசமூர்த்தி மரணத்திற்கு நீதி கேட்டு, அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

போலிஸ் தாக்கியதால் மனமுடைந்து தற்கொலை: “உயிர்குடிக்கும் மாவட்டமாகும் தூத்துக்குடி?”- மு.க.ஸ்டாலின் வேதனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

எட்டயபுரத்தில் போலிஸ் தாக்குதலால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட கணேசமூர்த்தி மரணத்திற்கு நீதி கேட்டு, அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி. கட்டிடத் தொழிலாளியான இவர் கடந்த 20ஆம் தேதி எட்டையபுரம் பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அந்த வழியாக சோதனையில் ஈடுபட்டிருந்த 4 காவல்துறையினர் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

பின்னர் வீட்டிற்கு வந்த கணேசமூர்த்தி தனது மனைவி மற்றும் பெற்றோரிடம் இதுகுறித்துக் கூறியுள்ளார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். கடந்த இரண்டு நாட்களாக மனமுடைந்து காணப்பட்ட கணேசமூர்த்தி நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் அவரது உடலை எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் போலிஸார் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்த நிலையில், கணேசமூர்த்தியின் தற்கொலைக்குக் காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தச் சம்பவத்தை அறிந்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உயிரிழந்த கணேசமூர்த்தி அவரது குடும்பத்திற்கு சென்று அவர்களது பெற்றோர் மற்றும் மனைவியிடம் ஆறுதல் கூறினார். தொடர்ந்து தி.மு.க சார்பாக ஒரு லட்ச ரூபாய் நிதி உதவியையும் வழங்கினார்.

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து தனது வேதனையைப் பதிவு செய்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

“காவல்துறையினர் தாக்குதலால் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோருக்கு நீதி கிடைக்காத நிலையில், எட்டயபுரம் கட்டடத் தொழிலாளி கணேசமூர்த்தி போலிஸாரால் தாக்கப்பட்டு மனமுடைந்து தற்கொலை செய்துள்ளார்.

உயிர்குடிக்கும் மாவட்டமாக தூத்துக்குடி மாறிவருகிறது. அப்பாவி மக்களைக் காப்பாற்றாமல் தவறு செய்பவர்களைக் காப்பாற்றுகிறாரா தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories