தமிழ்நாடு

உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் திருப்பம் : கவுசல்யா தந்தை விடுதலை - உயர் நீதிமன்றம் தீர்ப்பு! 

5 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் திருப்பம் : கவுசல்யா தந்தை விடுதலை - உயர் நீதிமன்றம் தீர்ப்பு! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருப்பூர் மாவட்டம் உடுமலை குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர் இவர், பழநியைச் சேர்ந்த கவுசல்யா என்ற பெண்ணை காதலித்து கலப்பு மணம் செய்தார். இதனால், கடந்த 2016 மார்ச் 13-ம் தேதி உடுமலையில் சாலையில் பட்டப்பகலில் சங்கர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த ஆணவப்படுகொலை தொடர்பாக கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாயார் அன்னலட்சுமி, பாண்டித்துரை, பழனி மணிகண்டன், எம்.மைக்கேல் (எ) மதன், பி.செல்வக்குமார், பி.ஜெகதீசன், தன்ராஜ், தமிழ் (எ) கலைதமிழ்வாணன், கல்லூரி மாணவர் பிரசன்ன குமார் மற்றும் பட்டிவீரன்பட்டி மணிகண்டன் என 11 பேர் மீது உடுமலை காவல்துறை கூலிப்படை வைத்து கொல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கு திருப்பூர் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரித்து கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ம் தேதி நீதிபதி அலமேலு நடராஜன் தீர்ப்பு வழங்கினார்.

உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் திருப்பம் : கவுசல்யா தந்தை விடுதலை - உயர் நீதிமன்றம் தீர்ப்பு! 

அதில் முதல் குற்றவாளியான கவுசல்யாவின் தந்தை சின்னசாமி குற்றவாளிகள் ஜெகதீசன், பழனி எம்.மணிகண்டன் , பி.செல்வக்குமார் , தமிழ் (எ) கலைதமிழ்வாணன் , மதன் (எ) எம். மைக்கேல் ஆகிய 6 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்தார். கூட்டு சதி, வன்கொடுமை ஆகிய இரு பிரிவுகளின் கீழ் 6 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

தன்ராஜ் (எ) ஸ்டீபன் தன்ராஜூக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனை விதித்தும், கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பட்டிவீரன்பட்டி மா.மணிகண்டனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார்.

இதில் கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி , தாய்மாமன் பாண்டித்துரை , கல்லூரி மாணவர் பிரசன்னகுமார் ஆகிய 3 பேரை விடுதலை செய்து திருப்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் திருப்பம் : கவுசல்யா தந்தை விடுதலை - உயர் நீதிமன்றம் தீர்ப்பு! 

இந்த தூக்கு தண்டனையை தண்டனையை உறுதி செய்வதற்காக இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது. அதேபோல தண்டனையை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்களும், விடுதலையை எதிர்த்து காவல்துறை தரப்பிலும் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது.

முதல் குற்றவாளியான கவுசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலை செய்தும் மீதமுள்ள ஜெகதீசன், பழனி எம்.மணிகண்டன், பி.செல்வக்குமார் தமிழ் (எ) கலைதமிழ்வாணன், மதன் (எ) எம். மைக்கேல் ஆகிய ஐந்து பேருக்கு தூக்கு தண்டனையை குறைத்து ஆயுள் தண்டனையாக மாற்றி தீர்ப்பளிக்கப்பட்டது.

மேலும், கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்பட 3 பேரின் விடுதலையை உறுதி செய்தும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள் விடுதலையை எதிர்த்து காவல் துறை தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்தும் தீர்ப்பளித்த நீதிபதிகள் ஒருவருக்கு விதித்த ஆயுள் தண்டனை; மற்றொருவருக்கு விதித்த 5 ஆண்டு சிறை தண்டனையும் ரத்து செய்தும் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். இந்த தீர்ப்பு 327 பக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories