தமிழ்நாடு

ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 14 வயது சிறுவன் : சைபர் கிரைம் போலிஸார் அதிர்ச்சி!

ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன்தான் என்பது தெரியவந்துள்ளது.

ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 14 வயது சிறுவன் : சைபர் கிரைம் போலிஸார் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியின் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த தகவலை கூறிய உடனே அந்த தொடர்பை மர்ம நபர் துண்டித்துள்ளார்.

இதனையடுத்து ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்ற வெடிகுண்டி நிபுணர்கள் அங்கு சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையின் போது வீட்டில் வெடிகுண்டு இல்லை எனவும் வெடிகுண்டு மிரட்டல் பொய் என்பதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கட்டுப்பாடு அறைக்கு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலிஸார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணை தொடர்பாக வெளியான தகவலில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் தான் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என்பது தெரியவந்துள்ளது.

ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 14 வயது சிறுவன் : சைபர் கிரைம் போலிஸார் அதிர்ச்சி!

இதனையடுத்து சிறுவன் பற்றி விசாரிக்கையில், அந்த சிறுவன் மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று தெரியவந்துள்ளது. சிறுவன் விளையாட்டாக செய்ததாக சிறுவனின் குடும்பத்தினர் கூற அந்த சிறுவன் மீது நடவடிக்கை எடுப்பதா? வேண்டாமா? என்பது குறித்து போலிஸார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ரஜினி தனது அரசியல் வருகை குறித்து பேசிய போது போர் வரட்டும் அப்போது களம் இறங்கலாம் என சொன்னாறே தற்போது இந்தியா - சீனா நாடுகளுக்கு நிலவும் பதற்றத்தை சுட்டிக்காட்டி ரஜினிகாந்த் வீட்டுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலை சம்மந்தப்படுத்தி சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

மேலும் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது 14 வயது சிறுவன் என்ற தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக கடந்த 2018 மே மாதம், 2019 மார்ச் ஆகிய இருமுறை ரஜினியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories