தமிழ்நாடு

தீவிரமடையும் தென்மேற்கு பருவக்காற்று : 11 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை கொட்டும் - வானிலை மையம் தகவல்!

கர்நாடகா, கோவை, குஜராத், மகாராஷ்டிரா கடற்கரை பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லக்கூடாது என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் உள்ள கோவை, நீலகிரி, தேனி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸையும் ஒட்டி இருக்கும்.

தீவிரமடையும் தென்மேற்கு பருவக்காற்று : 11 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை கொட்டும் - வானிலை மையம் தகவல்!

கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 7 செ.மீ, வால்பாறையில் 6 செ.மீ, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் கோவை மாவட்டம் சின்கோனாவில் 5 செ.மீ, சோலையாரில் 4 செ.மீ, தேனி மாவட்டம் பெரியாறு, புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் 3 செ.மீ மழையும், தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியில் 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

கர்நாடகா, கோவா மற்றும் மகாராஷ்டிர கடலோரப் பகுதிகளில்இன்று (ஜூன் 18 ) சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதாலும், குஜராத் கடற்பகுதிகளில் இன்றும் நாளையும் பேரலையானது 4 செ.மீ வரை எழும்பக்கூடும் என்பதாலும் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories