தமிழ்நாடு

கொல்லிமலையில் மிளகு மற்றும் காஃபி செடிகளை சூறையாடிய வெட்டுக்கிளிகள் - மலைவாழ் மக்கள் வேதனை!

கொல்லிமலையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மிளகு மற்றும் காப்பி செடிகளை ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் கூட்டமாக வந்து இலைகளை சாப்பிடுவதால் மலைவாழ் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மலைவாழ் மக்கள் மிளகு சாகுபடி செய்துள்ளனர். சில்வர் ஓக் மரங்களை தோட்டத்தில் நடவு செய்யப்பட்டு அதில் மிளகு செடிகளை ஏற்றிவிடடுள்ளனர். மேலும் தோட்டத்தில் ஊடுபயிராக காஃபி செடிகளும் பயிரிட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த இரு நாட்களாக வளப்பூர் நாடு ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தில், ஆயிரக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்து உள்ளன. அவை மிளகு மற்றும் காஃபி செடிகளில் உள்ள இலைகளை சாப்பிட்டு வருகின்றனர். இதனால் மொட்டையாக காட்சியளியளித்த செடிகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் வெட்டிக்கிளி வருகை குறித்து வேளாண்த்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கொல்லிமலை மலை வாழ் மக்கள் விவசாயி கூறும்போது, “இந்த வெட்டுக்கிளி முதுகில் மூன்றுகருப்பு கோடுகள் உள்ளதாகவும் கொல்லிமலையில் இதுபோன்ற வெட்டுக்கிளிகள் இதற்கு முன்பு பார்த்தது இல்லை” என்றும் இவை அதிக அளவில் இலைகளை சாப்பிடுவதால் மலைவாழ் மக்கள் கவலை அடைந்து உள்ளனர்.

banner

Related Stories

Related Stories