தமிழ்நாடு

“மருத்துவ உபகரண முறைகேடுகளை எதிர்த்ததால் ஐ.ஏ.எஸ் அதிகாரி இடமாற்றம்!?” - எடப்பாடி அரசு அராஜகம்!

சுகாதாரத்துறை உள்ளிட்ட 3 துறைகளில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் சுகாதாரத்துறை உள்ளிட்ட 3 துறைகளில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பணியாற்றும் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் சண்முகம் பிறப்பித்துள்ளார்.

அதன்படி, தமிழக சுகாதாரத்துறை திட்ட இயக்குனராக உள்ள நாகராஜன் ஐ.ஏ.எஸ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சித்துறை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சர்க்கரைத் துறை கூடுதல் இயக்குனர் அஜய் யாதவ் தமிழக சுகாதாரத்துறை திட்ட இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

“மருத்துவ உபகரண முறைகேடுகளை எதிர்த்ததால் ஐ.ஏ.எஸ் அதிகாரி இடமாற்றம்!?” - எடப்பாடி அரசு அராஜகம்!

நகர மற்றும் ஊரக திட்டமிடல் இயக்குனர் இருக்கும் சந்திரசேகர் சகாமுரி நிலச் சீர்திருத்தங்கள் துறை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதிக விலைக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க மறுத்த காரணத்தால் தமிழக சுகாதாரத்துறையின் திட்ட இயக்குநர் பணியிலிருந்து நாகராஜன் ஐ.ஏ.எஸ் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் கசிந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories