தமிழ்நாடு

“மணல் திருடிய அ.தி.மு.க பிரமுகர்கள் கைது”: நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுக்கும் அமைச்சர் - புலம்பும் போலிஸ்!

மணல் திருட்டில் ஈடுபட்ட அ.தி.மு.க பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்கவிடாமல் அமைச்சர் அழுத்தம் தருவதாக புகார் எழுந்துள்ளது.

“மணல் திருடிய அ.தி.மு.க பிரமுகர்கள் கைது”: நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுக்கும் அமைச்சர் - புலம்பும் போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மினிக்யூர் பகுதி ஆற்று ஓடைகளில் மணல் கொள்ளை தொடர்பாக புகார் மாவட்ட போலிஸாருக்குச் சென்றுள்ளது.

இதனையடுத்து நேற்று அதிகாலை தனிப்படை போலிஸார் அ.தி.மு.க ஒன்றிய கவுன்சிலரின் கணவர் பெருமாள் மற்றும் அ.தி.மு.க பிரமுகர்கள் திருப்பதி, சதாசிவம், ரவிசந்திரன் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர். இவர்கள் கைது செய்யப்பட்டதில் இருந்தே ஆளுங்கட்சி தரப்பில் இருந்தே அழுத்தம் தரப்படுவதாக போலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.

குறிப்பாக, கைது செய்தவர்களை சிறைக்கு கொண்டு செல்லக்கூடாது என பக்கத்து தொகுதி அமைச்சர் ஒருவருவர் உதவியதாகவும் கூறப்படுகிறது. அதனால் மாஜிஸ்திரேட்டில் வீட்டில் ஆஜர்படுத்திய 9 பேருக்கும் கொரோனா பரிசோதனை எடுக்க வேண்டும் எனக்கூறி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

“மணல் திருடிய அ.தி.மு.க பிரமுகர்கள் கைது”: நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுக்கும் அமைச்சர் - புலம்பும் போலிஸ்!

இதனால் அவர்களை சிறையில் அடைக்கமுடியாத நிலை உருவாகியுள்ளது. இதனிடையே 9 பேருக்கும் இன்று ஜாமின் பெறுவதற்கு முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. மணல் கொள்ளை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதிலும் அமைச்சர் குறுக்கிடுகிறாரே? என புலம்புகின்றனர் போலிஸார்.

banner

Related Stories

Related Stories