தமிழ்நாடு

அம்மா உணவகத்தில் சாப்பிடுவதுபோல் போட்டோவுக்கு போஸ் கொடுத்த அதிமுக எம்.எல்.ஏ:மக்களை இப்படி ஏமாற்றுவது ஏன்?

அமைச்சர், நகராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் அம்மா உணவகத்தில் தயார் செய்திருந்த உணவை ருசி பார்ப்பதுபோல் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த சம்பவம் மக்கள் மத்தியில் அம்பலமானது.

அம்மா உணவகத்தில் சாப்பிடுவதுபோல் போட்டோவுக்கு போஸ் கொடுத்த அதிமுக எம்.எல்.ஏ:மக்களை இப்படி ஏமாற்றுவது ஏன்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள செதுகரை நகராட்சி பகுதியில் உள்ள அ.தி.மு.கவினருக்கு 5 கிலோ அரசு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியை அ.தி.மு.கவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

அந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இடித்துக்கொண்டு வரிசையில் நின்றுவந்ததை பார்த்தும் அமைச்சர் கண்டுக்கொள்ளாமல் பொருட்கள் வழங்கியது அங்கிருந்த பத்திரிக்கையாளர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதுமட்டுமின்றி, விளம்பரத்திற்காக அ.தி.மு.க செய்த சம்பவம் மக்கள் மத்தியில் அம்பலமானது. அதாவது, குடியாத்தம் பேருந்து நிலையம் அருகே உள்ள அம்மா உணவகத்திற்குள் நுழைந்த அமைச்சர்கள் அ.தி.மு.க சார்பில் இலவச உணவுகளை வழங்கினார்கள்.

அம்மா உணவகத்தில் சாப்பிடுவதுபோல் போட்டோவுக்கு போஸ் கொடுத்த அதிமுக எம்.எல்.ஏ:மக்களை இப்படி ஏமாற்றுவது ஏன்?

அப்போது அமைச்சர், நகராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் அம்மா உணவகத்தில் தயார் செய்திருந்த உணவை ருசி பார்ப்பதுபோல் புகைப்படம் எடுப்பதற்காக போஸ் கொடுத்தனர்.

அப்போது கே.வி.குப்பம் எம்.எல்.ஏ லோகநாதன் முகக்கவசம் அணிந்து கொண்டு, உணவு சாப்பிடுவதுபோல் போஸ் கொடுத்தார். பின்னர் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட உணவை அங்கேயே வைத்து விட்டு சென்றனர். இதைப்பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

banner

Related Stories

Related Stories