தமிழ்நாடு

#Corona : "செயல்படாத அ.தி.மு.க அரசு" : செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்கள் கைது - போலிஸார் அராஜகம்!

அ.தி.மு.க-வினரின் அதிகார பலத்தால் காவல்துறையினர் இரு பத்திரிகையாளர்களை தகுந்த காரணமின்றி விசாரணைக்கு அழைத்து அலைக்கழித்துள்ளனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

செயல்படாத அ.தி.மு.க அரசு தொடர்பாக கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏவின் அறிக்கை மற்றும் கோவை மாநகராட்சி ஊழியர்களுக்கும், கோவையில் பயிற்சி மருத்துவர்கள் உணவிற்கு சிரமம் அடைந்துள்ள செய்தியையும், கோவையில் உள்ள ரேஷன் கடையில் நிவாரணப் பொருட்களை கொள்ளையடிப்பதாக வந்த குற்றச்சாட்டை செய்தியாக வெளியிட்டதற்காக ஆன்லைன் மீடியா நிருபர்கள் ஜெரால்டு, பாலாஜி ஆகிய இருவர் கோவையில் போலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க-வினரின் அதிகார பலத்தால் காவல்துறையினர் இரு பத்திரிகையாளர்களை தகுந்த காரணமின்றி விசாரணைக்கு அழைத்து அலைக்கழித்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து கோவை பத்திரிகையாளர் மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,

“கோவை சிம்ப்ளிசிட்டி ஆன்லைன் செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் புகைப்படக் கலைஞர் பாலாஜி என்பவரை இன்று காலை உதவி ஆணையர் ராமசசந்திரன் விசாரணைக்கு வரவழைத்துள்ளார்.

#Corona : "செயல்படாத அ.தி.மு.க அரசு" : செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்கள் கைது - போலிஸார் அராஜகம்!

“கோவை சிம்ப்ளிசிட்டி ஆன்லைன் செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் புகைப்படக் கலைஞர் பாலாஜி என்பவரை இன்று காலை உதவி ஆணையர் ராமசசந்திரன் விசாரணைக்கு வரவழைத்துள்ளார். விசாரணைக்கு காவல் நிலையம் வந்த பாலாஜியிடம் செல்போனை வாங்கி வைத்துக்கொண்டு வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் பாலாஜியை அமர வைத்துள்ளார். புகைபட கலைஞர் பாலாஜியை காவல் நிலையத்தில் உட்கார வைத்த தகவல் அறிந்த சக பத்திரிகையாளர்கள் வெரைட்டி ஹால் காவல் நிலையம் சென்றுள்ளனர்.

அப்போது உடன் இருந்த சிம்ப்லிசிட்டி செய்தியாளர் ஜெரால்டையும் விசாரணைக்கு என அழைத்து வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் உதவி ஆணையர் ராமச்சந்திரன் உட்கார வைத்துள்ளார். எதற்காக பத்திரிகையாளர்களிடம் விசாரணை என மற்ற செய்தியாளர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியும் காவல்துறையினர் பதில் அளிக்கவில்லை.

இரண்டு மணி நேரம் கடந்த நிலையில் இரு பத்திரிகையாளர்களையும் காவல் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஆர்.எஸ்.புரம் காவல்நிலைய ஆய்வாளர் கனகசபாபதி ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் கிளம்பினார். பத்திரிகையாளர் இருவரும் என்ன தவறு செய்தார்கள் ? எதற்காக காவல் வாகனத்தில் ஏற்றி செல்கின்றீர்கள் என ஆய்வாளர் கனகசபாபதியிடம் கேட்டபோது அவர் உரிய பதில் அளிக்கவில்லை.

#Corona : "செயல்படாத அ.தி.மு.க அரசு" : செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்கள் கைது - போலிஸார் அராஜகம்!

பத்திரிகையாளர்கள் இருவரையும் நாங்களே காவல் நிலையம் அழைத்து வருகின்றோம் என மூத்த செய்தியாளர்கள் ஆய்வாளர் கனகசபாபதியிடம் கேட்ட போதும் அவர் அனுமதிக்க மறுத்து, காவல் வாகனத்தில் இருவரையும் ஏற்றி ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

பத்திரிகையாளர் ஜெரால்டு, பாலாஜி ஆகியோரை கோவை மாநகர காவல் துறை தரக்குறைவாக நடத்தும் போக்கினை கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கின்றது.

கொரோனா தொடர்பான நடவடிக்கைகள் குறித்து சிம்ப்ளிசிட்டி நிறுவனம் செய்தி வெளியிட்டதில் மாறுபட்ட கருத்துகள் இருந்தால் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை மேற்கொள்வதில் எந்த தவறுமில்லை.

ஆனால் இரு பத்திரிகையாளர்களை எதற்காக விசாரணைக்கு அழைத்தோம் என்பதை கூட சொல்லாமல் கோவை மாநகர காவல் துறை , இரு பத்திரிகையாளர்களையும் தரக்குறைவாக நடத்துவது மோசமான செயல் என்பதை சுட்டிகாட்டுகின்றோம்.

கோவை மாநகர காவல்துறையின் இதுபோன்ற செயல்பாடுகள் ஊடகங்களுக்கு பாதுகாப்பற்ற, அச்ச உணர்வை இந்தச் சூழல் ஏற்படுத்தி இருக்கின்றது என்பதையும் சுட்டிகாட்டுகின்றோம்.

கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வரும் காலத்தில் பத்திரிகையாளர்கள் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றி வரும் சூழலில் கோவை மாநகர காவல்துறை இத்தகைய செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இரு பத்திரிகையாளர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் கேட்டுக்கொள்கின்றது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories