தமிழ்நாடு

"அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு முடிவு இல்லையா?" - ஆதங்கத்தை வெளிப்படுத்திய தி.மு.க எம்.எல்.ஏ! (Video)

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஆளுங்கட்சியினரின் தூண்டுதலின் பேரில் மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா வழங்கிய கிருமிநாசினி சுரங்கப்பாதைக்கு அனுமதி மறுத்துள்ளனர்.

"அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு முடிவு இல்லையா?" - ஆதங்கத்தை வெளிப்படுத்திய தி.மு.க எம்.எல்.ஏ! (Video)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் தீவிரமடைந்து வருகிறது. நேற்று வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 571 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 621 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவால், பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு, அத்தியாவசிய பொருட்கள் விற்பதற்கான கடைகளும் உழவர் சந்தைகளும் செயல்பட்டு வருகின்றன.

அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் வகையில் மன்னாா்குடி நகர்ப் பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. அங்கு மக்கள் அதிகமாக கூடுவதால் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கான அபாயம் அதிகமாக உள்ளது.

"அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு முடிவு இல்லையா?" - ஆதங்கத்தை வெளிப்படுத்திய தி.மு.க எம்.எல்.ஏ! (Video)

இதனால், அங்கு கிருமி நாசினி தெளிப்புப் பாதை அமைக்க மன்னார்குடி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ டிஆா்பி. ராஜா ஏற்பாடு செய்தாா். தனது சொந்தப் பணத்திலிருந்து கிருமி நாசினி தெளிப்புப் பாதை, அதற்கான கருவிகளை வாங்கி மன்னார்குடி நகராட்சி நிர்வாகத்திடம் வழங்கினார்.

இந்த கிருமி நாசினி சுரங்கம் அமைப்பதற்கு முதலில் அனுமதி அளித்த நகராட்சி அதிகாரிகள் பின்னர், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஆளுங்கட்சியினரின் தூண்டுதலின் பேரில் அனுமதி மறுத்துள்ளனர்.

இதனால், டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ நகராட்சி அதிகாரிகளிடம் தனது ஆதங்கதை வெளிப்படுத்தியுள்ளார். நகராட்சி நிர்வாகிகளிடம் இதுகுறித்துக் கேள்வி எழுப்பிய அவர், “ஒன்று நீங்கள் செய்யுங்கள்... இல்லையெனில் எங்களையாவது செய்ய விடுங்கள்.” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், ட்விட்டரில் இதுகுறித்துப் பதிவிட்டுள்ள அவர், “இத்தகைய அரசியல் காழ்ப்புணர்ச்சியிலிருந்து என்று விடிவு காலம் வரும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

குறிப்பாக, தி.மு.க எம்.எல்.ஏ வழங்கிய கிருமி நாசினி பாதைக்கான பேனரில் எந்த இடத்திலும் தி.மு.க பெயரோ, சின்னமோ எதுவும் இடம்பெறவில்லை. இத்தனைக்கும் அது தொகுதி மேம்பாட்டு நிதியில் கூட இல்லாமல் எம்.எல்.ஏ தனது சொந்தப் பணத்திலிருந்து வாங்கி நகராட்சிக்கு அளித்தது.

மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு தி.மு.க எம்.எல்.ஏ வாங்கி அளித்த கிருமி நாசினி சுரங்கப் பாதையை நிறுவ மறுத்த அதிகாரிகள், ஆட்சியாளர்கள் மீது மக்கள் மத்தியிலும் அதிருப்தி நிலவி வருகிறது.

banner

Related Stories

Related Stories