தமிழ்நாடு

"மார்ச் 9ஆம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை” - முக்கிய பிரச்னைகளை எழுப்பவிருக்கும் தி.மு.க!

தமிழக சட்டப்பேரவை மார்ச் 9ஆம் தேதி மீண்டும் கூடவுள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழக சட்டப்பேரவை மார்ச் 9ஆம் தேதி மீண்டும் கூடவுள்ளது. இந்தக் கூட்டத்தில் துறைவாரியான மானிய கோரிக்கைகள் நடைபெறவுள்ளது.

2020-21 ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்காக கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடியது. நிதி அமைச்சரும் துணை முதலமைச்சரருமான ஓ.பன்னீர்செல்வம் நிதி நிலை அறிக்கைகையை தாக்கல் செய்தார்.

நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் கடந்த 17ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை நடைபெற்றது. எதிர்க்கட்சியான தி.மு.க அரசின் போதாமைகளைச் சுட்டிக்காட்டி பல்வேறு பிரச்னைகளை எழுப்பியது. பின்னர் தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

"மார்ச் 9ஆம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை” - முக்கிய பிரச்னைகளை எழுப்பவிருக்கும் தி.மு.க!

அரசின் செலவுககளுக்கான முன்பண மானியக் கோரிக்கை, துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் ஆகியவற்றுக்காக தமிழக சட்டப்பேரவை மீண்டும் மார்ச் 9ஆம் தேதி கூடுகிறது. இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுளார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் சுமார் 20 நாட்கள் நடைபெற வாய்ப்புள்ளது. பேரவை கூட்டத்தொடரின் நாட்கள் மற்றும் எந்தெந்த நாட்களில் எந்த மானியக் கோரிக்கை தாக்கல் செய்வது என்பது குறித்து அடுத்த வாரம் நடைபெற உள்ள அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் இறுதி செய்யப்படவுள்ளது.

குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, டி.என்.பி.எஸ்.சி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories