தமிழ்நாடு

தந்தை பெரியாரின் பெருந்தொண்டர் ‘ஆசிட்’ தியாகராஜன் இன்று காலமானார்!- அவர் பற்றிய சுவாரஸ்ய தகவல் தெரியுமா?

‘தந்தை பெரியாரின் மண் தமிழ்நாடு’ என சமூகநீதிக்குரல்கள் இன்றையதினம் ஒலித்துவரும் வேளையில், தந்தை பெரியாரின் சிந்தனைகளை முன்னெடுத்த பெருந்தொண்டராக அந்தக் காலத்திலேயே வலம்வந்தவர் ‘ஆசிட்’ தியாகராஜன்.

தந்தை பெரியாரின் பெருந்தொண்டர் ‘ஆசிட்’ தியாகராஜன் இன்று காலமானார்!- அவர் பற்றிய சுவாரஸ்ய தகவல் தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

திருச்சி தியாகராஜன் என்பவர் தந்தை பெரியாரின் சீரிய தொண்டர். 1957-ம் ஆண்டில் பெரியார் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்தபோது பெரியார் தரப்பு வழக்கறிஞர் நீதிபதியிடம், `பெரியார்... பெரியார்' என்று கூறியதற்கு, அரசுத் தரப்பு வழக்கறிஞர் சீனிவாசாச்சாரி, `ராமசாமி நாயக்கர்' எனச் சொல்லச் சொல்லியிருக்கிறார். இது தியாகராஜனுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வழக்கில் பெரியாருக்குத் தண்டனை கிடைத்ததும், அரசுத் தரப்பு வழக்கறிஞர் மீது ஆசிட் வீசியிருக்கிறார் தியாகராஜன்.

தந்தை பெரியாரின் பெருந்தொண்டர் ‘ஆசிட்’ தியாகராஜன் இன்று காலமானார்!- அவர் பற்றிய சுவாரஸ்ய தகவல் தெரியுமா?

இதுகுறித்து கடந்த 2007ஆம் ஆண்டு பெரியார் திராவிடர் கழகம் நடத்திய சாதி ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட ஆசிட் தியாகராஜன் அளித்த ஒப்புயர்வற்ற வாக்குமூலம் வருமாறு :

தந்தை பெரியாருக்கு 3 ஆண்டு தண்டனை தரப்பட்டபோது, முதல் நாளே என்னைக் கைது செய்து விட்டார்கள். கைது செய்த என்னை அடுத்த நாள் நீதிமன்றம் கொண்டு வந்தார்கள். இரண்டாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றம் முன் என்னை நிறுத்தி வைத்திருந்தார்கள்.

மாவட்ட நீதிமன்றத்தில் அய்யாவுக்கு 3 வருட தண்டனை கொடுத்து, மற்றொரு பக்கம் அய்யாவைக் கொண்டு போகிறார்கள். தண்டனை அறிவித்தவுடன் எனது சகாக்கள் கடும் அமளியில் இறங்கிவிட்டார்கள்.

தந்தை பெரியாரின் பெருந்தொண்டர் ‘ஆசிட்’ தியாகராஜன் இன்று காலமானார்!- அவர் பற்றிய சுவாரஸ்ய தகவல் தெரியுமா?

அய்யாவுக்குத் தண்டனை தந்த பிறகு என்னால் சும்மா இருக்க முடியுமா? சீனிவாசாச்சாரி என்ற வெறி பிடித்த பார்ப்பனர்தான் அரசு வழக்கறிஞர். நமது இனத்துக்கு மிகப் பெரும் கேடு செய்தவன். அவனது கடந்த கால சரித்திரம் முழுமையும் நான் தெரிந்துகொண்டேன்.அதனால் நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்.என்னிடம் கழக முக்கியஸ்தர்கள் எல்லாம் வந்து, நீங்கள் தயவுசெய்து பொறுமையாக இருங்கள் என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டார்கள். ஜனவரி 26ஆம் தேதி அய்யாவை விட்டு விடுவார்கள் என்றார்கள். அதுவரை பொறுமையாகக் காத்திருந்தேன். ஜன.26 மாலை ஓரு முடிவுக்கு வந்தேன்.

தந்தை பெரியாரின் பெருந்தொண்டர் ‘ஆசிட்’ தியாகராஜன் இன்று காலமானார்!- அவர் பற்றிய சுவாரஸ்ய தகவல் தெரியுமா?

என்னுடன் அருமைத் தோழர் சின்னச்சாமி துணைநின்றார். ஒரு பெரிய திட்டத்துக்கு தயாராகி நின்ற எங்களிடம் இருந்த பணம் எவ்வளவு தெரியுமா? நான்கு அணா. வெறும் நான்கு அணா தான்! ரேடியோ செய்தி கேட்டேன். பெரியார் விடுதலை பற்றி எதுவும் சொல்லவில்லை. குடியரசு நாள் நிகழ்ச்சியில், அரசு வழக்கறிஞர் கலந்து கெள்கிறார் என்ற சேதி கிடைத்தது. என்னுடைய நண்பன் சின்னச்சாமியிடம் கூறினேன். நான் முடிவு செய்துவிட்டேன்; நீ போய்விடு என்று கூறினேன். பெரியார் வாழ்க என்று கூறி இருவரும் கை குலுக்கினோம்.

அப்போது, சின்னச்சாமி, என்னைத் தனியே விட்டுப் போக மறுத்துவிட்டான். நானும் சேர்ந்து கொள்கிறேன் என்றான். “வேண்டாம் சின்னச்சாமி, தயவு செய்து நீ போய்விடு. என்னுடைய தாயை மறந்துவிட்டு நான் இந்த இடத்தில் நிற்கிறேன்; எனக்கு அய்யா தான் முக்கியம்” என்று சொன்னேன்.

சீனிவாசாச்சாரி குடியரசு நாள் விழாவில் பங்கேற்றுவிட்டு வந்தான். போலிஸுக்கு எதிரேயே போய் கழுத்தைப் பிடித்துச் சுழற்றி முகத்தில் ‘ராஸ்கல்’ என்று கூறி ‘ஆசிட்’ வீசினேன். அவன் கீழே விழும்போது 8 மணி சங்கு ஊதியது. தோளிலும், முகத்திலும் குத்தினேன். 300 பேர் விரட்டி வந்தனர். முடியுமா? என்னிடம் யாரும் நெருங்க முடியவில்லை.

அதற்குப் பிறகு காவல்நிலையத்தில் என்னை அழைத்துப் போய் விசாரித்தார்கள். இன்ஸ்பெக்டர் என்னை மிகவும் மதித்து சமமாக உட்கார வைத்து தோளில் கைபோட்டுப் பேசினார். அப்போது என்னிடம் கேட்டார். “எவ்வளவோ பெரியார் தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இல்லாத கவலை உனக்கு மட்டும் ஏன்? நீ மட்டும் ஏன் இத்தகைய தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறாய்?” என்று கேட்டார், நான் சொன்னேன்.

“நீங்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்; நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவன்; என்னை சமமாக உட்கார வைத்து, நீங்கள் எனது தோளில் கை போட்டுப் பேசுகிறீர்கள். 25 ஆண்டுகளுக்கு முன், எனது சமூகம் தீண்டப்படாத சமூகம்; இன்று எனக்கு இந்த சம உரிமையைப் பெற்றுத் தந்தது பெரியார்.

அந்த உணர்வுதான் என்னை இயக்குகிறது. ஏதோ ஒரு நாள் – இதே திருச்சியில் பெரியாரின் இறுதி ஊர்வலம் போகும். அப்போது எல்லோரும் கண்ணீர் விட்டு அழுவார்கள்; அப்போது நான் மட்டும் அழமாட்டேன். காரணம், பெரியாரை தண்டித்தவர்களுக்கு எல்லாம், சரியான பாடம் புகட்டி விட்டேன் என்ற மனநிறைவில் நான் மகிழ்ந்து நிற்பேன்” என்று கூறிவிட்டு, நான் குலுங்கிக் குலுங்கி அழுதேன். எனக்கு முன்னாள் புகைப்பிடித்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர், சிகரெட்டை தூக்கி வீசி விட்டு அவரும் கண்ணீர் விட்டார்.”

இவ்வாறு ஆசிட் தியாகராஜன் பேசினார்.

இதுமட்டுமல்ல, தந்தை பெரியார் பற்றி அவதூறாக பேசி அவரது படத்தினை செருப்பால் அடித்த இந்துத்துவா கும்பலைச் சேர்ந்த ஒருவர் மீது அவர் பேசிய கூட்டத்திலேயே சோடாபாட்டில்களை வீசியவர்தான் இந்த ஆசிட் தியாகராஜன்.

பெரியாரின் பெருந்தொண்டராக விளங்கியவர், தன்னுடைய இறுதிநாட்களில் தஞ்சையில் வசித்த அவர், தனது 90 வது வயதில் இன்று காலமானார். ஏராளமான பெரியார் தொண்டர்கள், இயக்கத்தினர் ஆசிட் தியாகராஜனுக்கு இணையவெளிகளிலும், நேரிலும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories