தமிழ்நாடு

“தான்தோன்றித்தனமாகவும், மனிதாபிமானமற்ற முறையிலும் நடந்து கொள்ளும் கல்வித்துறை அமைச்சர்” : கனிமொழி சாடல்!

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், தான்தோன்றித்தனமாக நடந்துகொள்வது மட்டுமல்லாது, மனிதாபிமானமற்ற முறையிலும் நடந்து கொள்வதாக தி.மு.க எம்.பி கனிமொழி கடுமையாகச் சாடியுள்ளார்.

“தான்தோன்றித்தனமாகவும், மனிதாபிமானமற்ற முறையிலும் நடந்து கொள்ளும் கல்வித்துறை அமைச்சர்” : கனிமொழி சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் வடக்கு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி பெருமாள். இவரது இரண்டாவது மகள் பேச்சியம்மாள் பாளையிலுள்ள குழந்தை ஏசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், பேச்சியம்மாள் அரையாண்டுத் தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததாகத் தெரிகிறது. மதிப்பெண்கள் குறைவாக எடுத்ததாகக் கூறி ஆசிரியர்கள், பெற்றோரை அழைத்துக் கண்டித்துள்ளனர். மேலும் பேச்சியம்மாளை வேறு பள்ளியில் சேர்க்குமாறு கூறியுள்ளனர்.

இதனால் மனம் உடைந்த மாணவி பேச்சியம்மாள் கடந்த 29ம் தேதி பெற்றோர் வேலைக்குச் சென்ற நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடயே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“தான்தோன்றித்தனமாகவும், மனிதாபிமானமற்ற முறையிலும் நடந்து கொள்ளும் கல்வித்துறை அமைச்சர்” : கனிமொழி சாடல்!

இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தி.மு.க எம்.பி., கனிமொழி, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், தான்தோன்றித் தனமாக நடந்துகொள்வது மட்டுமல்லாது, மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்கிறார் என கடுமையாக சாடியுள்ளார்.

இதுதொடர்பாக கனிமொழி எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில், “தூத்துகுடி மாவட்டம், செய்துங்கநல்லூரில் உள்ள குழந்தை ஏசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த 15 வயது பேச்சியம்மாள், ஆசிரியர்கள் கடுமையாக திட்டியதால் தற்கொலை செய்து கொண்ட செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

அரையாண்டுத் தேர்வில் குறைவாக மதிப்பெண் பெற்ற பேச்சியம்மாளின் பெற்றோரை பள்ளி நிர்வாகம் அழைத்து வேறு பள்ளியில் சேர்க்கச் சொல்லி வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்தே பேச்சியம்மாள் தற்கொலை செய்துள்ளார்.

ஒரு மாணவரின் கல்வி மற்றும், அவர் பெறும் மதிப்பெண்களுக்கு, பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களுமே பொறுப்பு. குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களை வெளியேற்றுவது, மோசடியானது மட்டுமல்ல, மனிதத்தன்மையற்றது.

10ம் வகுப்பு படிக்கும் மாணவியாலேயே, தேர்வு அழுத்தத்தை எதிர்கொள்ள முடியவில்லை என்றால், பொதுத் தேர்வு எழுத உள்ள 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவ மாணவியர் இந்த அழுத்தத்தை எப்படி எதிர்கொள்வர்?

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், தான்தோன்றித் தனமாக நடந்துகொள்வது மட்டுமல்லாது, மனிதாபிமானமற்ற முறையிலும் நடந்து கொள்கிறார். 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வினை உடனடியாக கைவிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories