தமிழ்நாடு

"பெரியார் குறித்த கருத்தை திரும்பப் பெறுவதே ரஜினிக்கு நல்லது" : புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அட்வைஸ்!

தந்தை பெரியார் குறித்த கருத்தை திரும்பப் பெற்று சர்ச்சைக்கு ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

"பெரியார் குறித்த கருத்தை திரும்பப் பெறுவதே ரஜினிக்கு நல்லது" : புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அட்வைஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

துக்ளக் ஆண்டு விழாவில் 1971ல் தந்தை பெரியார் நடத்திய பேரணியில் இந்து கடவுளாக கருதப்படும் ராமர், சீதை உருவத்தை நிர்வாணமாக ஊர்வலமாகக் கொண்டு சென்றதாகக் குறிப்பிட்டு நடிகர் ரஜினிகாந்த் பேசியது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

ரஜினியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியாரிய இயக்கங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நீதிமன்றத்தில் ரஜினிக்கு எதிராக வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.

இந்நிலையில், தந்தை பெரியார் குறித்த கருத்தை ரஜினிகாந்த் திரும்பப் பெற்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, “பகுத்தறிவு ஆசானாக இருந்து மக்கள் மத்தியில் இருக்கும் மூட நம்பிக்கைகளை போக்க வாழ்நாள் முழ்வதும் போராடியவர் தந்தை பெரியார்.

"பெரியார் குறித்த கருத்தை திரும்பப் பெறுவதே ரஜினிக்கு நல்லது" : புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அட்வைஸ்!

சில தகவல்களை மட்டும் வைத்துக்கொண்டு தந்தை பெரியார் குறித்தும், திராவிட கழகத்தை குறித்தும் ரஜினி பேசி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ரஜினி தனது கருத்தை திரும்ப பெற்றுக்கொண்டு இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த சர்ச்சையில் ரஜினி தலையிடாமல் இருப்பது நல்லது.” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories