தமிழ்நாடு

விரைவில் பெரியார் வாழ்க என ரஜினி கூறுவார் - திருமாவளவன் எம்.பி பேட்டி!

ரஜினிகாந்த் சங் பரிவாரின் கருத்துகளுக்கு அடிபணிந்து செயல்படுகிறார் என வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விரைவில் பெரியார் வாழ்க என ரஜினி கூறுவார் - திருமாவளவன் எம்.பி பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

துக்ளக் விழாவில் தந்தை பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து இது தொடர்பாக பேசியுள்ளார் விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன்.

அதில், “தந்தை பெரியாரை விமர்சிப்பது, கொச்சைப்படுத்துவது 10 ஆண்டுகளாக நடந்து வருகிறது. மாமலையிடம் மோதி குப்புற விழுந்திருக்கிறார்கள். பேரறிஞர் அண்ணாவும், கலைஞரும் பெரியாரின் கொள்கைகளுக்கு தேர்தல் அரசியலில் மேன்மேலும் வலு சேர்த்தவர்கள்.

சங் பரிவாரின் கருத்துகளுக்கு ரஜினிகாந்த் அடிப்பணிந்து செயல்படுகிறார்.

விரைவில் பெரியார் வாழ்க என ரஜினி கூறுவார் - திருமாவளவன் எம்.பி பேட்டி!

ரஜினி பகடை காயாக மாறி வருகிறார் போலும். இல்லை அதுதான் அவரது அடையாளமாக இருந்தால் அது அவரது அரசியல் நிலைப்பாடாக இருந்தால் அந்த கனவு பலிக்காது.

பெரியார் இல்லாமல் தமிழகத்தில் அரசியலில் ஈடுபட முடியாது. இதனை ரஜினி விரைவில் உணர்வார். விரைவில் பெரியார் வாழ்க என ரஜினிகாந்த் தெரிவிப்பார்.

இறுதியாக, பொதுத்தேர்வுகளை பொறுத்தவரை 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு கொண்டு வருவது ஏற்புடையது அல்ல. தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு செய்து, தமிழில் வழிபாடு நடத்தவேண்டும்.” என திருமாவளவன் கூறினார்.

banner

Related Stories

Related Stories