தமிழ்நாடு

”போலிஸை முட்டி போட வைத்த கஞ்சா வியாபாரிக்கு கை கால் உடைந்தது” - போலிஸின் பழிக்குப் பழி!

நெய்வேலியில் மத்திய பாதுகாப்பு படை வீரரை கத்தி காட்டி முட்டி போட வைத்து வீடியோ எடுத்த கஞ்சா வியாபாரி மணி கை கால் உடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

”போலிஸை முட்டி போட வைத்த கஞ்சா வியாபாரிக்கு கை கால் உடைந்தது” - போலிஸின் பழிக்குப் பழி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் என்.எல்.சி குடியிருப்பில் வசித்து வருபவர் செல்வேந்திரன். இவர் என்.எல்.சி இரண்டாம் நிலக்கரி சுரங்கத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார்.

வழக்கம் போல இரண்டு நாட்களுக்கு முன்பு செல்வேந்திரன் மற்றும் இரண்டு பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மந்தாரக்குப்பம் ஓம் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி மணி என்ற கஞ்சா மணி மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேர், என்.எல்.சி சுரங்க பகுதியில் அத்துமீறி நுழைந்து காப்பர் கம்பிகளை வெட்டி எடுத்துக்கொண்டு செல்ல முயன்றுள்ளனர்.

இதைப்பார்த்த செல்வேந்திரன் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் மணியை மடக்கிப் பிடித்துள்ளனர். அப்போது தன் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து பாதுகாப்பு படை வீரர் செல்வேந்திரனை குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதையடுத்து ரத்த வெள்ளத்தில் இருந்த செல்வேந்திரனை சக பாதுகாப்பு படையினர் மீட்டு மருத்துவனையில் அனுமதித்தனர். பின்னர் இதுதொடர்பாக மந்தாரக்குப்பம் காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது.

ஆனால் போலிஸார் மணியை மிரட்டி எச்சரிக்கை விடுத்து அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் போது, பாதுகாப்பு படைவீரரை கத்தியைக் காட்டி மிரட்டியதும், மண்டியிடவைத்து மிரட்டியதும் செல்போனில் படம் எடுத்துள்ளனர்.

அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலை மறைவான மணியும், அவரது கூட்டாளி அன்பும் நாகர்கோவிலில் கைது செய்யப்பட்டனர்.

”போலிஸை முட்டி போட வைத்த கஞ்சா வியாபாரிக்கு கை கால் உடைந்தது” - போலிஸின் பழிக்குப் பழி!

இதைத் தொடர்ந்து நெய்வேலி காவல் நிலையத்திற்கு அவர்களை அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையின் போது இருவரும் சுவர் ஏறிக்குதித்து தப்பித்து ஓட முயன்ற போது தவறிவிழுந்து கைகால் உடைந்ததாகவும் அவர்கள் இருவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலிஸார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

ஆனால் கடந்த சில காலமாக, இது போன்ற அடாவடி செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் திமிரை அடக்குவதாக, காவல் துறை கை, கால்களை உடைத்து கட்டுப்போட்டு வருகிறது. கழிவறையில் அவர்களே வழுக்கி விழுந்ததாகவும், தப்பிச் செல்லும் போது விழுந்து கை, கால்களை உடைத்துக் கொண்டதாகவும் பத்திரிகை செய்தி வெளியிட்டு வருகிறது தமிழக காவல்துறை. குறிப்பாக குற்றம் நடக்கும் வீடியோ வைரலாக பரவினால், அந்த குற்றவாளிகள் நிச்சயம் வழுக்கி விழுவதை காவல் துறை உறுதி செய்கிறது. அந்த வகையில், போலிஸயே கத்தியால் குத்தி கஞ்சா மணியின் கை, கால்களும் உடைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

”பேச்சாடா பேசுன” என்பது போல், இப்போது கை மற்றும் காலில் கட்டுகளோடு பரிதாபமாக காட்சித் தருகிறார் கஞ்சா மணி.

banner

Related Stories

Related Stories