தமிழ்நாடு

“7 பேர் விடுதலை குறித்து எந்த முடிவும் எடுக்காத ஆளுநர் உரை எதற்கு?” : மு.க.ஸ்டாலின் பேட்டி!

ஆளும்கட்சியால் தயாரிக்கப்பட்ட ஆளுநர் உரையை நிராகரிப்பதாக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தபின் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

“7 பேர் விடுதலை குறித்து எந்த முடிவும் எடுக்காத ஆளுநர் உரை எதற்கு?” : மு.க.ஸ்டாலின் பேட்டி!
File Photo
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் வேளையில், உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், டெல்லி ஜே.என்.யூ மாணவர்கள் மீதான தாக்குதல் என பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது.

இந்நிலையில், சட்டப்பேரவைக் கூட்டத்தில் நடைபெற்ற ஆளுநர் சிறப்பு உரையைப் புறக்கணித்து பேரவையில் இருந்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம்.

தமிழகத்தின் மொத்தக் கடன் 4 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. தொழில் வளர்ச்சி, புதிய வேலைவாய்ப்புகள் இல்லை. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது தமிழக அரசு. இதுவரை ஆளுநரிடம் இருந்து எந்த செய்தியும் வரவில்லை.

“7 பேர் விடுதலை குறித்து எந்த முடிவும் எடுக்காத ஆளுநர் உரை எதற்கு?” : மு.க.ஸ்டாலின் பேட்டி!

இந்த நாட்டின் மதச்சார்பின்மைக்கும் அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அ.தி.மு.க ஆதரித்துள்ளது. அ.தி.மு.க ஆதரவால் அச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால், சிறுபான்மையினர், ஈழத்தமிழர்களுக்கு மிகப்பெரிய துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது.

நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், தேர்தல் ஆணையம், காவல்துறை, அரசு நிர்வாகம் ஒன்றுசேர்ந்து கூட்டணி அமைத்துக்கொண்டு, ஆளும் கட்சிக்கு ஆதரவாக வெளிப்படையாக செயல்பட்டிருக்கிறது.

மேலும், தமிழக தேர்தல் ஆணையர் எடப்பாடி பழனிசாமியின் பள்ளிக்கூடத்தில் தேர்தல் விதிமுறைகளை படித்திருப்பார் என நினைக்கிறேன். அந்த பழனிசாமி, எடப்பாடி பழனிசாமி சொல்வதைக் கேட்டு நடந்திருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் ஆளும்கட்சியால் தயாரிக்கப்பட்ட ஆளுநர் உரையை நிராகரிப்பதாக மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories