தமிழ்நாடு

அதிகாரிகள் முன்னிலையில் சரமாரியாக கள்ள ஓட்டு போட்ட அ.தி.மு.க நிர்வாகி : சேலத்தில் அராஜகம்!

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பூலாவரி கிராமத்தில் வாக்குச்சாவடியில் அ.தி.மு.க.வினர் அதிகாரிகள் முன்னிலையிலேயே கள்ள ஓட்டு போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரிகள் முன்னிலையில் சரமாரியாக கள்ள ஓட்டு போட்ட அ.தி.மு.க நிர்வாகி : சேலத்தில் அராஜகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடங்கியது. முதற்கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடைபெறுகிறது.

சேலம் மாவட்டத்தில் 2,162 பதவிகளுக்கான தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதலமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே தேர்தல் விதிமுறைகளை அ.தி.மு.கவினர் மீறி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பூலாவரி கிராமத்தில் வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த வாக்காளர்களின் வாக்குகளை அ.தி.மு.க.வினரே செலுத்தியதால் அதிர்ச்சி அடைந்தனர். அ.தி.மு.க.,வினர் கள்ள ஓட்டு போட்ட விவகாரம் தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது.

தேர்தல் நடத்தும் அதிகாரிகள், வாக்குச்சாவடி அலுவலர்கள் முன்னிலையிலேயே அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவர் பலரது வாக்குகளை அவரே செலுத்தியதை அவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories