தமிழ்நாடு

“வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் முறைகேடு நடக்க வாய்ப்பு”: செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு!

உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியினர் முறைகேட்டில் ஈடுபடுவதால், இந்த தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்குமா என தெரியவில்லை என கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் செந்தில்பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.

“வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் முறைகேடு நடக்க வாய்ப்பு”: செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில், முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், நெல்லை உட்பட புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து, மற்ற 27 மாவட்டங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில் கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் செந்தில்பாலாஜி வாக்களித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தேர்தல் முறையாக நடைபெறவேண்டும் என்றால், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டிருக்க வேண்டும். வாக்களிக்க வருபவர்களை வீடியோவில் பதிவு செய்யவேண்டும்.

ஆனால், தற்போது நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் அப்படி எந்தவொரு விதியும் பின்பற்றப்படவில்லை. குறிப்பாக எந்த பதிவும் கிடையாது, யார் வேண்டுமானாலும் வரலாம், போகலாம் என்ற சூழலை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது.

இதன் மூலம் தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது. அதனால், உள்ளாட்சி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்குமா என தெரியவில்லை, வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories