தமிழ்நாடு

“உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க கூட்டணி அமோக வெற்றிபெறும்” - திருமாவளவன் எம்.பி. பேட்டி!

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளின் பேரணி போல எங்களின் அறவழி போராட்டம் தொடரும் என திருமாவளவன் பேசியுள்ளார்.

“உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க கூட்டணி அமோக வெற்றிபெறும்” - திருமாவளவன் எம்.பி. பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தந்தை பெரியாரின் 46வது நினைவு நாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “குடியுரிமை சட்டத்திருத்தை திரும்பப் பெறக்கோரி தி.மு.க மற்றும் தோழமைக் கட்சிகள் நடத்திய கண்டனப் பேரணி இந்திய அளவில் திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது. இதேபோல குடியுரிமை சட்டத்துக்கு எதிரான எங்களுடைய அறவழிப் போராட்டம் தொடரும் என தந்தை பெரியார் நினைவு நாள் அன்று உறுதி ஏற்கிறோம்.

ஜார்கண்ட் மாநில தேர்தலில் சவுக்கடி வாங்கிய பா.ஜ.கவுக்கும் , எப்போதும் அதற்குத் துணை போகும் அ.தி.மு.கவிற்கும் வரும் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். இந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க மற்றும் தோழமை கட்சிகள் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கீழ்வெண்மணி படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை, சேப்பாக்கத்தில் நாளை (டிசம்பர் 25) கண்டன பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.” என திருமாவளவன் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories