தமிழ்நாடு

‘சிங்கம் சூர்யா நாங்கதான்...’: தில்லாலங்கடி வேலை பார்த்த சமையல் மாஸ்டர்கள்- பல லட்ச ரூபாய் மோசடி!

போலிஸ் போல் நடித்து பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்த இரண்டு  சமையல் மாஸ்டர்கள் சிக்கினர். இந்த போலிகள் குறித்து ருசிகர தகவல்கள் வெளியாகி உள்ளன.

‘சிங்கம் சூர்யா நாங்கதான்...’: தில்லாலங்கடி வேலை பார்த்த சமையல் மாஸ்டர்கள்- பல லட்ச ரூபாய் மோசடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த விருதம்பட்டு காவல்நிலைய சரக காவலர்கள் சம்பவத்தன்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி ஆவணங்களை கேட்டுள்ளனர்

அப்போது, பைக்கில் வந்தவர்கள் “நாங்கள் யார் தெரியுமா, சி.பி.ஐ., அதிகாரிகள், எங்க வண்டியையே மடக்குறீங்க” எனக் கூறி தங்களிடம் இருந்த சி.பி.ஐ., அடையாள அட்டையை காட்டியுள்ளனர்.

மைதீன், ஹரிஹரன்
மைதீன், ஹரிஹரன்

சந்தேகமடந்த போலிஸார் அவர்கள் இருவரிடமும் துருவி, துருவி விசாரணையில் ஈடுபட்டனர். அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.

அதில், கைதானவர்கள் விருதம்பட்டு மைதீன்(43), கழிஞ்சூர் ஹரிஹரன் (24) என்றும், இருவரும் சதுப்பேரியில் உள்ள ஷூ கம்பெனி ஒன்றின் கேன்டினில் சமையலர்களாக பணிபுரிந்து வருவது தெரியவந்துள்ளது.

பணம் பறிக்கும் எண்ணத்தில் போலியாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., சி.பி.ஐ., அதிகாரிகள் போன்று அடையாள அட்டைகளை தயாரித்து பல நாட்களாக மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

ஃபேஸ்புக்கிலும் சிங்கம் சூர்யா போல போலிஸ் உடையில் போட்டோ எடுத்து பகிர்ந்துள்ளனர். அவர்கள் தங்கியிருக்கும் வீட்டின் அக்கம்பக்கத்தினரும் மைதீனும், ஹரிஹரனும் உண்மையான போலிஸார் என்றே இதுவரை நம்பி வருகின்றனர். மேலும், சிபிஐ போலிஸ் எனக் கூறி பலரிடம் மைதீனும், ஹரிஹரனும் பணம் பறித்துள்ளனர் என்பதும் போலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மைதீன் மற்றும் ஹரிஹரன் ஆகியோரை கைது செய்த போலிஸார், அவர்களின் ஃபேஸ்புக்கை ஆராய்ந்ததில் அவர்களுடன் இணைந்து போட்டோ எடுத்துக்கொண்ட மேலும் மூவர் குறித்த விசாரணையிலும் இறங்கியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, மைதீன் மற்றும் ஹரிஹரன் வீடுகளில் போலிஸார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.4.70 லட்சம் ரொக்கப்பணமும், போலிஸ் சீருடைகள் மற்றும் துப்பாக்கி வைக்கக் கூடிய உறைகள் கைப்பற்றப்பட்டன.

இதனைத்தொடர்ந்து இதுவரை சேகரிக்கப்பட்ட விவரங்களைக் கொண்டு கைதானவர்களின் பின்னணியில் பெரிய மோசடி கும்பல் இருக்கிறதா என்ற கோணத்தில் போலிஸார் துரித விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.இவர்களிடம் ஏமாந்தவர்கள் யார்? யார்? என்ற விசாரணையிலும் போலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories