தமிழ்நாடு

கடன் சுமையால் 20,000 ரூபாய்க்கு பேத்திகளை கூலி தொழிலுக்கு விற்ற பாட்டி - அதிர்ச்சி சம்பவம்!

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே 2 சிறுமிகள் இருபதாயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடன் சுமையால் 20,000 ரூபாய்க்கு பேத்திகளை கூலி தொழிலுக்கு விற்ற பாட்டி - அதிர்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே வெள்ளகுளம் பகுதியைச் சேர்ந்த சிறுமிகள் கவிதா மற்றும் சங்கீதா. சிறுமிகள் இருவரையும் அவர்களது பாட்டி 10,000 ரூபாய்க்கு இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக குடவாசல் கிராம நிர்வாக அலுவலர் குடவாசல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில், சிறுமிகளை விற்ற பாட்டி மற்றும் இடைத்தரகர்கள் மீது காவல்துறையினர் குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விற்கப்பட்ட சிறுமிகள் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு பின்னலாடை ஆலையில் பணிபுரிந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சிறுமிகளை மீட்பதற்காக 2 காவல் உதவி ஆய்வாளர்கள் கொண்ட குழு ஈரோடு விரைந்துள்ளனர். சிறுமிகள் இன்றைக்குள் மீட்கப்படுவார்கள் என திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை தெரிவித்துள்ளார்.

கடனுக்காக சிறுமிகள் விற்பனை போன்ற சம்பவங்கள் வடமாநிலங்களில் நடக்கும் என நாம் செய்திகளில் படித்திருப்போம். இந்நிலையில், திருவாரூரில் குழந்தைகளை விற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories