தமிழ்நாடு

மாணவி ஃபாத்திமா ’மர்ம’ மரணம் : சுதர்சன் பத்மநாபன் உட்பட ஐ.ஐ.டி பேராசிரியர்கள் 3 பேருக்கு சம்மன் !

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு தொடர்பாக ஐஐடி பேராசிரியர்கள் 3 பேருக்கு மத்திய குற்றப்பிரிவு போலிஸ் சம்மன் அனுப்பியுள்ளது.

மாணவி ஃபாத்திமா ’மர்ம’ மரணம் : சுதர்சன் பத்மநாபன் உட்பட ஐ.ஐ.டி பேராசிரியர்கள் 3 பேருக்கு சம்மன் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை ஐஐடி-யில் கடந்த வாரம் ஐ.ஐ.டி.யில் முதுகலை படிப்பு பயின்று வந்த கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்தீப் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு ஃபாத்திமா லத்தீப் தற்கொலைக்கு முக்கிய காரணமாக மூன்று பேராசிரியர்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில் ஃபாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலிஸாரிம் ஒப்படைக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்து வந்த மத்திய குற்றப்பிரிவு போலிஸார் குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் உள்ளிட்ட சில பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தியுள்ளார்.

மாணவி ஃபாத்திமா ’மர்ம’ மரணம் : சுதர்சன் பத்மநாபன் உட்பட ஐ.ஐ.டி பேராசிரியர்கள் 3 பேருக்கு சம்மன் !

முன்னதாக மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும், முழு விசாரணை நடத்த கோரியும் கேரள முதல்வரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார்.

அந்த மனுவை கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி வைத்துள்ளார். தமிழக முதல்வரும் மாணவி தற்கொலை விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories