தமிழ்நாடு

தமிழகத்தில் அதிகரிக்கும் எச்.ஐ.வி பாதிப்பு; காசநோய், என மூடிமறைக்கும் சுகாதாரத்துறை : அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் ஒரு லட்சத்து 18 ஆயிரம் பேருக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு இருப்பதாக தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அதிகரிக்கும் எச்.ஐ.வி பாதிப்பு; காசநோய், என மூடிமறைக்கும் சுகாதாரத்துறை : அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடப்பு ஆண்டில் 34 லட்சத்து 54 ஆயிரத்து 183 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு உள்ளதா என பொது பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், 12 லட்சத்து 52 ஆயிரத்து 871 கர்ப்பிணி பெண்களுக்கு எச்.ஐ.வி. சோதனை நடத்தப்பட்டது.

எய்ட்ஸ் நோயாளிகளின் இறப்பு விகிதம் மருத்துவ ரீதியாக பதிவு செய்வதில்லை. இதனால் நோயின் தாக்கம் மற்றும் நோயாளிகளின் நிலை குறித்த விவரங்கள் தெரியாத சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், மாநில அளவில் 1.18 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பதாக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு 1.13 லட்சம் பேர் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

நடப்பு ஆண்டில் 5 ஆயிரம் பேர் புதிய நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், ஆயிரத்துக்கும் மேலானோர் இந்த நோய் தாக்கத்தால் உயிரிழந்துவிட்டதாகவும் தெரிகிறது.

ஆனால், அவர்கள் எய்ட்ஸ் தாக்கத்தால் உயிரிழக்கவில்லை என்றும், சுவாச நோய் மற்றும் காசநோய் பாதிப்பால் உயிரிழந்ததாகவும் சுகாதரத்துறை பதிவு செய்துள்ளது.

இதனிடையே தமிழக சிறைகளில் எய்ட்ஸ் பாதிப்பால் கைதிகள் இறப்பது அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் இருந்து இதுவரை 20க்கும் மேற்பட்டோர் எய்ட்ஸ் பாதிப்பில் இறந்துவிட்டதாக அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories