தமிழ்நாடு

“மக்கள் மீது எந்த மொழியைத் திணித்தாலும் தி.மு.க எதிர்க்கும்” - கனிமொழி எம்.பி. பேட்டி!

எந்த மொழிக்கும் எதிரான இயக்கம் தி.மு.க அல்ல என்றும் இந்தி மொழி திணிக்கப்படுவதாலேயே எதிர்க்கிறோம் என்றும் கூறினார் கனிமொழி.

“மக்கள் மீது எந்த மொழியைத் திணித்தாலும் தி.மு.க எதிர்க்கும்” - கனிமொழி எம்.பி. பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தூத்துக்குடியில் இருந்து சென்னை திரும்பிய தி.மு.க மக்களவை உறுப்பினர் கனிமொழி, சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது, எந்த மொழிக்கும் எதிரான இயக்கம் தி.மு.க அல்ல என்றும் இந்தி மொழி திணிக்கப்படுவதாலேயே எதிர்க்கிறோம் என்றும் கூறினார் கனிமொழி.

மேலும் பேசிய அவர், “பணி நிமித்தமாக மற்ற மாநிலங்களுக்குச் செல்லும்போது அந்த மாநில மொழிகளை தெரிந்துகொள்வதிலோ அல்லது கற்றறிவதிலோ எந்தத் தவறும் இல்லை.

“மக்கள் மீது எந்த மொழியைத் திணித்தாலும் தி.மு.க எதிர்க்கும்” - கனிமொழி எம்.பி. பேட்டி!

அதுபோல, இந்தி எனும் மொழியை கற்றுக்கொள்ளவேக்கூடாது என்ற நிலைப்பாட்டில் தி.மு.கழகம் இல்லை. ஆனால், தமிழர்கள் மட்டுமல்லாது எந்த மாநில மக்கள் மீதும் மொழியைத் திணிக்கக் கூடாது. அது கலாசார ஆக்கிரமிப்பு. ஆகவே எந்த மொழியை திணித்தாலும் திராவிட முன்னேற்ற கழகம் எதிர்க்கும்” எனக் கூறினார்.

முன்னதாக, தூத்துக்குடி தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளரின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற கனிமொழி, மணமக்களை வாழ்த்தி மேடையில் பேசினார். பின்னர், பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னுக்கு வரவேண்டும் எனக் கூறினார். தி.மு.க ஆட்சியின்போது கலைஞர் கொண்டுவந்த திட்டங்களால் பெண்கள் வளர்ச்சியடைந்தது குறித்தும் சுட்டிக்காட்டினார்.

banner

Related Stories

Related Stories