தமிழ்நாடு

அடுத்த வாரம் முதல்வர் திறக்க இருந்த தடுப்பணை மழையால் சேதம் : டெண்டர் ஊழலால் அபாயத்தில் மக்கள் உயிர் !

காஞ்சிபுரம், வல்லிபுரம் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை, கன மழையை தாங்காமல் கற்கள் மற்றும் மண் சரிந்து ஆற்றில் விழுந்துள்ளது.

அடுத்த வாரம் முதல்வர் திறக்க இருந்த தடுப்பணை மழையால் சேதம் : டெண்டர் ஊழலால் அபாயத்தில் மக்கள் உயிர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாற்றின் குறுக்கே பல்வேறு பகுதிகளில் தடுப்பணைகள் அமைக்க பல ஆண்டுகளாக அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஆற்றுப்படுகையில் கடல்நீர் உட்புகுந்து பாலாற்றின் கரையோரத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களின் விளைநிலங்களில் ஊடுருவியதால் விவசாயம் பாதிக்கப்பட்டதாக கூறி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

விவசாயிகளின் பல்வேறுகட்ட போராட்டங்களுக்குப் பிறகு, வல்லிபுரம் கிராமப் பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட தமிழக அரசு கடந்த 2018-ம் ஆண்டு 30.90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. இதன்பேரில், கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய பணிகள் மழைக்காலத்துக்குள் முடிக்கவேண்டும் என தீர்மாணித்து தடுப்பணையின் கட்டுமானப் பணிகளை கடந்த மாதம் நிறைவு செய்தனர்.

இதனால், வடகிழக்கு பருவ மழையால் செங்கல்பட்டுவை அடுத்த பாலாற்றில் பெருக்கெடுத்து வரும் தண்ணீரை சேமிக்க வல்லிபுரம் தடுப்பணை தயாராக உள்ளதாக அரசு அதிகாரிகள் கூறிவந்தனர். இந்நிலையில், இந்த புதிய தடுப்பணை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்துவைக்க உள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளதாக அதிகாரிகள் கூறிவந்தனர்.

அடுத்த வாரம் முதல்வர் திறக்க இருந்த தடுப்பணை மழையால் சேதம் : டெண்டர் ஊழலால் அபாயத்தில் மக்கள் உயிர் !

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழைக்குத் தாங்காமல் கறைகளில் பதிக்கப்பட்ட கற்கள் மற்றும் மண் சரிந்து ஆற்றில் விழுந்துள்ளது. அணை கட்டி ஒருவாரம் கூட ஆகாத நிலையில் அணை மழையால் சேதமடைந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயி ஒருவர் கூறுகையில், “இந்த அணைக்காக பல கட்டப் போராட்டங்கள் நடைபெற்றது. அதன் விளைவாக வந்த தடுப்பணையை முறையாக இந்த அரசாங்கம் கட்டித்தரவில்லை. இந்த மழைக்கே கற்கள் பெயர்ந்து மண் சரிந்து ஆற்றில் விழுந்துகிடக்கிறது. இதைவிட பலத்தமழையோ, வெள்ளப்பெருக்கோ வந்தால் இந்த அணை என்னாகும்.

அ.தி.மு.க அமைச்சர்கள் தெரிந்தவர்களுக்குத் டெண்டர் விட்டு முறையாக இந்த அணையைக் கட்டவில்லை. இதில் அடுத்த வாரம் முதல்வர் திறந்துவைப்பதாக கூறியிருந்தார்கள். இதுபோல பிரச்சனையால் இந்த அணையை மீண்டும் எப்போது சரி செய்து திறப்பார்கள் என தெரியவில்லை” என குற்றம்சாட்டியுள்ளார்.

banner

Related Stories

Related Stories