தமிழ்நாடு

புதிய குழித் தோண்ட 12 மணிநேரம் ஆகும்; சுஜித்தை மீட்கும் பணி ஒருபோதும் கைவிடப்படாது - ராதாகிருஷ்ணன் தகவல்

சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்.

 புதிய குழித் தோண்ட 12 மணிநேரம் ஆகும்; சுஜித்தை மீட்கும் பணி ஒருபோதும் கைவிடப்படாது - ராதாகிருஷ்ணன் தகவல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருச்சி மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவன சுர்ஜித்தை மீட்கும் பணி 65 மணிநேரத்தை தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில் மீட்பு பணி குறித்து செய்தியாளர்களை சந்தித்த வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது,

“சுர்ஜித்தை மீட்கும் பணி எந்த வித ஒளிவு மறைவும் இல்லாமல் நடைபெற்று வருகிறது. புதிதாக தோண்டப்படும் ஆழ்துளை கிணற்றில் பாறைகள் உள்ளதால் குழி தோண்டுவதில் சற்று சுணக்கம் ஏற்பட்டு வருகிறது.

 புதிய குழித் தோண்ட 12 மணிநேரம் ஆகும்; சுஜித்தை மீட்கும் பணி ஒருபோதும் கைவிடப்படாது - ராதாகிருஷ்ணன் தகவல்

வேகமாக குழியை தோண்டினால் பாறைகளில் இருந்து தீபிடிக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் ஓஎன்ஜிசி நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் ரிக் இயந்திரம் இயக்கப்பட்டு வருவதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதுமட்டுமல்லாமல், குழந்தை இருக்கும் குழிக்கும் புதிதாக தோண்டப்பட்டிருக்கும் கிணற்றுக்கும் பக்கவாட்டில் குழி தோண்ட மண்ணியல் நிபுணர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் அரசும், மீட்பு படையினரும் உறுதியாக உள்ளனர். மேலும், குழித் தோண்டுவதால் குழந்தை மீது மண் விழுவதற்கு வாய்ப்புள்ளதால் ஏர்லாக் பிரஷர் கொடுக்கப்பட்ட குழந்தையை இறுக்கமாக பிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறுவனின் நிலை குறித்து அண்ணா பல்கலையில் கேமிரா மூலம் கண்காணிக்கப்பட்டு அவரது பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு வருகிறது.

 புதிய குழித் தோண்ட 12 மணிநேரம் ஆகும்; சுஜித்தை மீட்கும் பணி ஒருபோதும் கைவிடப்படாது - ராதாகிருஷ்ணன் தகவல்

ரிக் இயந்திரத்தின் மூலம் இதுவரை 40 அடிக்கு குழி தோண்டப்பட்டுள்ளது எனவும் பாறைகள் கடினமாக இருப்பதாலேயே குழித் தோண்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. 40 அடிக்கு கீழே கரிசல் மண் இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு இருந்தால் அதன் பிறகு குழித் தோண்டுவதில் எந்த இடர்பாடும் இருக்காது என்ற நம்பிக்கை உள்ளது.

98 அடிவரை குழித் தோண்டப்படவுள்ளதால் ஒரு மணிநேரத்தில் 500 செ.மீ வரை ஆழம் போடப்பட்டு வருகிறது. ஆகவே இன்னும் குழித் தோண்ட 12 மணிநேரம் எடுக்கக்கூடும் என தெரிவித்த ராதாகிருஷ்ணன், சிறுவனை மீட்பதற்கு ஆகக் கூடிய செலவை அரசே ஏற்கும் என்றும் கூறினார்.

மேலும், குழந்தையை மீட்பதற்காக யார் வந்தாலும் அவர்களின் ஆலோசனைகளையும் செயல்பாடுகளையும் ஏற்க அரசு தயாராக உள்ளது” என்றும் ராதாகிருஷ்ணன் கூறினார்.

banner

Related Stories

Related Stories