தமிழ்நாடு

‘பிகில்’ வெறித்தனம்: கிருஷ்ணகிரியை கலவர பூமியாக்கிய விஜய் ரசிகர்கள்! - 37 பேர் கைது!

கிருஷ்ணகிரியில் போலிஸாரின் கெடுபிடி அதிகரித்ததால் ஆத்திரமடந்த விஜய் ரசிகர்கள் சிலர் போலிஸாரின் ஒலி பெருக்கி, கண்காணிப்பு மேடை ஆகியவற்றை சேதப்படுத்தியுள்ளனர்.

‘பிகில்’ வெறித்தனம்: கிருஷ்ணகிரியை கலவர பூமியாக்கிய விஜய் ரசிகர்கள்! - 37 பேர் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
premjourn
Updated on

பிகில் படத்தின் சிறப்புக்காட்சி அதிகாலை 4 மணிக்கு சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் திரையிடப்பட்டது. இதையடுத்து திரையரங்குகளில் கூடிய விஜய் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், நடனமாடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். ரசிகர்கள் அதிகளவு கூடியதால் ஒரு சில திரையரங்குகளில் சிறப்புக்காட்சி ஒரு மணி நேரம் தாமதமாக திரைப்படம் தொடங்கப்பட்டது.

கிருஷ்ணகிரியில் பிகில் படம் திரையிடப்பட்ட திரையரங்கின் முன்பாக ரசிகர்கள் கூட்டம் அதிகமானதால் அவர்களை கட்டுப்படுத்த போலிஸார் கடும் கெடுபிடிகளை விதித்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து ஆத்திரம் அடைந்த விஜய் ரசிகர்கள் சிலர் ரவுண்டானா பகுதியில் போலிஸாரின் ஒலி பெருக்கி, மற்றும் தீபாவளியை முன்னிட்டு போலிஸார் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு உயர மேடை ஆகியவற்றை சேதப்படுத்தினர்.

இதையடுத்து அதிவிரைவு படை போலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று லேசான தடியடி நடத்தி விஜய் ரசிகர்களை கலைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஓசூர் மற்றும் சூளகிரி பகுதியை சேர்ந்த 37 பேரை பிடித்து போலிஸார் விசாரித்துவருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories