தமிழ்நாடு

சென்னை மெட்ரோவில் 50% கட்டணச் சலுகை - பயணிகளின் வருகையை அதிகரிக்க புதிய அறிவிப்பு!

தீபாவளி பண்டிகையையெட்டி சென்னை மெட்ரோவில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு 50 சதவித கட்டண சலுகை அளிக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை மெட்ரோவில் 50% கட்டணச் சலுகை - பயணிகளின் வருகையை அதிகரிக்க புதிய அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடு முழுவதும் வரும் 27-ம் தேதி தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் தீபாவளி கொண்டாட்டம் நெருங்கி வரும் வேலையில் சென்னையில் உள்ள பலர் தங்கள் ஊருக்கு செல்ல தயாரகிவருகின்றனர்.

முன்னதாக தீபாவளிக்கு 26 மற்றும் 27 தேதிகளில் மட்டுமே விடுமுறை இருந்தநாளில் தற்போது 28-ம் தேதியும் விடுமுறை அளித்துள்ளது தமிழக அரசு.

தீபாவளி பண்டிகைக்காக போக்குவரத்துறையும் கூடுதல் பேருந்து இயக்கப்படும் வேலையில், சென்னை மெட்ரோவில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு 50 சதவித கட்டண சலுகை அளிக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் இனி வரும் அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும், அரசு பொது விடுமுறை நாட்களிலும் கட்டணத்தில் 50% தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளது மெட்ரோ நிர்வாகம்.

banner

Related Stories

Related Stories