தமிழ்நாடு

ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் இலக்கு... டாஸ்மாக் கடைகளுக்கு இந்தாண்டு தீபாவளி டார்கெட் எவ்வளவு தெரியுமா?

அ.தி.மு.க அரசு ஆண்டுக்கு ஆண்டு டாஸ்மாக் விற்பனை இலக்கை அதிகரித்து வருகிறது.

ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் இலக்கு... டாஸ்மாக் கடைகளுக்கு இந்தாண்டு தீபாவளி டார்கெட் எவ்வளவு தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அ.தி.மு.க அரசின் கடந்த கால ஆட்சியில் இருந்தே டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மதுபோதைக்கு அடிமையாக்கி வரும் டாஸ்மாக் விற்பனையை குறைப்பதற்கு பதிலாக அதிகரிக்கும் வழிகளையே செய்து வருகிறது அ.தி.மு.க அரசு.

குறிப்பாக பண்டிகை காலங்களில் இலக்கு நிர்ணயித்து விற்பனையை அதிகரித்து லாபத்தை ஈட்ட தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டு மதுவிற்பனை 260 கோடிக்கும், கடந்த 2018ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு 330 கோடி ரூபாய்க்கும் மதுவிற்பனை நடைபெற்றது.

இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. எனவே, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலேயே அதிகமான விற்பனை செய்து வருமானம் ஈட்ட திட்டமிட்டுள்ளனர். இந்த ஆண்டு 350 கோடி ரூபாய் அளவுக்கு தீபாவளி மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும் டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

அ.தி.மு.க அரசின் இந்த மோசமான நடவடிக்கைக்கு பெண்கள் மற்றும் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

banner

Related Stories

Related Stories